Friday, March 2, 2012

முஸ்லிம் சமுதாய ஏழைப் பெண்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உதவி!



கடலூர், மார்ச் 01 : முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள் மகளிர் குழுக்கள் மூலம் பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டவும், கதர் கைவினை பொருட்கள், சிறு தொழில் ஆகியவற்றில் பல்வேறு பயிற்சிகளை அளிக்கவும், ஆதரவற்ற விதவைகளுக்கு மாதம் தோறும் தலைவராகக் கொண்டு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் துவக்கப்பட்டுள்ளது.
இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆரம்ப நிதி ஆதார வகையில் விதைத் தொகையாக தலா ஒரு லட்சம் நிதி அரசால் வழங்கப்பட்டுள்ளது. இச்சங்கங்களின் வளர்ச்சிக்காவும் பல்வேறு நலத் திட்டங்களுக்காகவும் திரட்டப்படும் நிதி ஆதாரத்திற்கு இணையான தொகை அல்லது 10 லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அத்தொகையை அரசு இணை மானியமாக ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
சங்கத்தின் நிதிக்கேற்ப இதர தகுதியான வகையில் உதவி புரிதல், ஆதவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு கைவினைக் பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல், ஆதரவற்ற முஸ்லிம் விதவைகள் மற்றும் வயதானவர்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுத்தல் போன்றவை செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள அனைத்து பெண்களும் பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
source: dinamalar

No comments:

Post a Comment