ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்!

ஆனால் பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.
அதிலும் அத்தகைய உணவுகளை தினமும் சாப்பிடுவது போர் தான். இருப்பினும் அவற்றை சாப்பிட்டால், நிச்சயம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். சரி. இப்போது அத்தகைய ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளைப் பார்ப்போமா!
மீன்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை (Tuna), கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.
பெர்ரிஸ்
பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.
பச்சை இலைக் காய்கறிகள்
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்
தேன்
தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
நட்ஸ்
நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பொருட்களை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.
தண்ணீர்
மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி சாலட் மற்றும் டாப்பிங்கில் அலங்கரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. அவை மூளையின் இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ரோஸ்மேரியில் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன.
* மலச்சிக்கல் பிரச்சனையா? பேரீச்சம் பழம் சாப்பிடுங்க
தினமும் சாப்பிடக்கூடிய பேரீச்சம்பழத்தில் என்ன பயன் இருக்குதுன்னு உங்களுக்கு தெரியும்?. சாதாரணமா நினைச்சிடாதீங்க பேரீச்சம்பழத்தை. பேரீச்சம்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்த விருத்தி செய்யும், எலும்புகளை பலப்படுத்தும், இளைப்பு நோயைக் குணப்படுத்தும் மேலும் இதயநோய் வராமல் தடுக்கும்.
மலச்சிக்கல்:
பேரீச்சம் பழம் மலச்சிக்களை போக்கக்கூடிய சிறந்த உணவாகும். மலச்சிக்களால் அவதிபடுபவர்கள் பேரீட்சைபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கள் பிரச்சனைகள் தீரும். மலச்சிக்களை போக்ககூடிய பேரீட்சைபழத்தை சாப்பிட விரும்பினால் தண்ணீரீல் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து விட்டு பின்னர் பேரீச்சம் பழத்தை சாப்பிடவேண்டும். ஒரு நாள் ஊற வைத்துவிட்டு சாப்பிடும் போதுதான் பேரீச்சம் பழத்தின் முழுபலனையும் பெறமுடியும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும்.
குடல் நோய்கள்:
எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடலை சக்தியுடன் வைத்துக்கொள்ள உதவும் சிறந்த உணவாகும். தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்கள் புத்துணர்வுடன் இருப்பதை காணலாம். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு குடல் நோய்கள் மற்றும் இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமடையும். வயிறு மற்றும் குடல் சம்பந்தமான அனைத்து நுண் கிருமிகளும் வெளியேறும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
சளி மற்றும் இருமல்:
பேரீச்சம் பழம் சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்தாக குழந்தைகளுக்கு பயன்படுகிறது. பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் அதிக பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு எலும்பும் பலப்படும்.
தொப்பையா? அதிக எடையா? ஒரு வாரத்தில் 5 கிலோ எடை குறைய...!
சிலர்
தொப்பையினால் மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கியமாக, உடல்
உழைப்பு இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வேலை செய்யும் நபர்களில்
பெரும்பாலோருக்குத் தொப்பை இருக்கும். வாகன ஓட்டுனர்கள், கணினி முன்
அமர்ந்து வேலை செய்வோரின் வயிறு விரைவில் பெருத்துவிடும்.
நோய் வருமுன்
காக்க வேண்டும் என்பது போல் தொப்பையும் வருமுன் காக்கவேண்டும். தொப்பை
விழுந்துவிட்டால், அது வந்த வேகத்தில் குறைப்பது என்பது நிச்சயமாக
இயலாத காரியம். தொப்பையினைக் குறைப்பதற்கான ஒரே வழி, உணவுக்கட்டுப்பாடும்
சரியான முறையிலான உடற்பயிற்சியுமே!
தொப்பை விழுவதன் காரணத்தை விளங்கிவிட்டால், அதனைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் பாதி கிணற்றைத்தாண்டியதற்கு ஒப்பானது.
மனிதனின் உடல் இயக்கத்திற்குச் சக்தி தேவை. இந்தச் சக்தி உண்ணும் உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான சக்தியினை கலோரி எனும் அலகின் மூலம் குறிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு ஆணின் உடல் இயக்கத்திற்குத் தினசரி சுமார் 2000 கலோரி சக்தி தேவை. அதுவே பெண்ணாக இருந்தால், சுமார் 1600-1800 கலோரி சக்தி தேவை. வயது, உடல் எடை, உழைப்பு ஆகியவற்றிற்குத் தகுந்தாற்போன்று இந்த அளவில் சிறு வித்தியாசம் இருக்கும்.
காலை எழுந்தது முதல், இரவு தூங்கச் செல்லும் வரை சராசரி உழைப்புடன் வாழும் ஒரு ஆணை எடுத்துக்கொள்வோம். அவருடைய உடலின் தினசரி இயக்கத்திற்கு சுமார் 2000 கலோரி சக்தி தேவைப்படுகிறது. ஆனால், அவர் 2000 கலோரி சக்தி தயாரிப்பதற்குப் போதுமான அளவைவிட குறைந்த அளவில் தினசரி உணவு உட்கொண்டால், 2000 கலோரியை ஈடுசெய்வதற்கான கூடுதல் கலோரியினை அவரின் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு அல்லது சதையிலிருந்து உடல் தானாகவே எடுத்துக்கொள்ளும். அதே சமயம், 2000 கலோரி அளவைவிட கூடுதல் கலோரி தயாரிக்கும் அளவில் உணவு உட்கொண்டால், கூடுதலாக உருவாக்கப்பட்ட கலோரி சதையாகவும் கொழுப்பாகவும் அவர் உடலில் சேமிக்கப்படும்.
இவ்வாறு அதிகப்படியாக உணவு உட்கொள்ளும் நபரின் தினசரி உடல் உழைப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில், சேமிக்கப்படும் அதிகப்படியான கலோரிகள் அவரின் உடலில் தேவையற்ற சதைகளையும் கொழுப்புகளையும் உருவாக்கும். இவ்வாறு உருவாகும் கொழுப்பு, முதல் கட்டமாக வயிற்றுப் பகுதியிலேயே(குடலைச் சுற்றி) படிகிறது. இதுவே தொப்பையாக வெளிப்புறத்தில் காட்சியளிக்கிறது.
எனவே, தொப்பையைக் குறைக்க விரும்புபவர் தினசரி தான் உண்ணும் உணவினைவிட அதிகப்படியான கலோரியினைச் செலவழிக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அதிகக் கலோரியினைச் செலவழிக்க, அதிக உடல் உழைப்பு(உதா: உடற்பயிற்சி) தேவை.
கணினி முன்னால் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றோருக்குத் தினசரி உடல் உழைப்பு குறைவு. இதனாலேயே இத்தகையவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், பெரிய தொப்பை விழுந்து விட்டவர்களுக்கு அவர்களாக விரும்பினால்கூட உடலை வருத்தும்வகையிலான உடற்பயிற்சிகள் செய்வது கடினம். தொப்பையின் மூலமாக, உடலில் படிந்த அதிக எடை சோர்வையும் அசதியையும் ஏற்படுத்துவதனால் தொடர் உடற்பயிற்சியில் ஈடுபடுவது கடினமாக இருக்கும்.
எனவே, தொப்பையைக் குறைக்க விரும்பும் ஒருவர் முதல் கட்டமாக தம் உடல் எடையினை இருப்பதனைவிட சிறிதளவாவது குறைக்க வேண்டும். இருக்கும் உடல் எடையில் ஓரளவு குறைத்துவிட்டால், அதன் பின்னர் உட்கார்ந்து எழும்புதல், குனிந்து நிமிர்தல் ஆகிய இரண்டு எளிய உடற்பயிற்சிகளும் தொப்பையினை எளிதில் குறைக்க உதவும்.
சரி, உடல் எடையினைக் குறைக்க என்னவழி?
1. உடற்பயிற்சி(அதிக உழைப்பு)
2. உணவு கட்டுப்பாடு
சாதாரணமாக தினசரி எடுத்துக்கொள்ளும் உணவின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் உடல் எடையினைக் குறைக்கலாம்.
ருசியாக உண்டு பழக்கப்பட்டோருக்கு உணவில் கட்டுப்பாடு என்பது வேப்பங்காயாக கசக்கும். இத்தகையவர்கள் ஒரு வாரம் தம் நாவினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டால், கீழ்கண்ட வழிமுறை ஒருவாரத்தில் குறைந்தது 5 கிலோ எடையினைக் குறைக்க உதவும். அதன் பின்னர், சாதாரண சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் தொப்பையினை விரைந்து குறைத்து விடமுடியும்.
குறுகிய காலத்தில் அதிக எடை குறைத்தல் என்பது, உடலுக்குத் தீங்கானது. ஆனால், இந்த வழிமுறை உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தாதது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா போன்ற இழுப்பு நோய் இல்லாத அனைவரும் கீழ்கண்ட வழிமுறையினைப் பின்பற்றலாம்.
7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை:
ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)
நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.
நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)
நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.
நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் - குறைந்தது 12 குவளை.
நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.
நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.
தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!
மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும்.
"இந்த டயட்டை உணவுக்கு முன்னர் பின்பற்றுவதா அல்லது உணவுக்குப் பின்னர் பின்பற்றுவதா?" என்ற கேள்வி யாருக்காவது எழுந்தால் அத்தகையோர் மட்டும் இச்சந்தேகம் தீரும்வரை இந்த டயட்டைப் பின்பற்றவேண்டாம்.
-குடும்ப நல ஆலோசகர் மதி

![]() |
||||
![]() |
|
விஷம்தான் உயிரைக் கொல்லும் என நினைக்கிறோம். நாம் சாப்பிடும் சில உணவுகளே ஸ்லோ பாஸ்சன் போல் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கொன்றுவிடும். ஆனால் அது தெரியாமலே அவற்றை ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்போம். குறிப்பாக பஜ்ஜி, வடை மற்றும் பொறித்த உணவு அயிட்டங்கள் உடலுக்கு எமன் என எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். இவற்றை சாப்பிடுவதால் கொழுப்பு அதிகமாகி, ரத்தக் குழாய் சுருங்கி மாரடைப்பு வர அதிகம் வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதென்னவோ தெரியவில்லை, பொறித்த அயிட்டங்கள் என்றாலே நம்மூர்க்காரர்களுக்கு ரொம்ப இஷ்டம். மாலை நேரத்தில் ஆபிஸ் முடிந்த பிறகோ அல்லது இடைவேளையிலோ டீக்கடைகளில் கொதிக்கும் எண்ணெய்யில் பொறித்து எடுத்த, சுடச் சுட இருக்கும் பஜ்ஜியை அங்கிருக்கும் பேப்பரில் நசுக்கி, எண்ணெயை பிழிந்து எடுத்துவிட்டு சாப்பிடும்போது, சொர்க்கத்தையே பார்த்து விட்டது போல் பரவசப்படுவார்கள். ரெண்டு பஜ்ஜி, ஒரு டீ அடித்த பிறகு ஒரு ‘தம்’ பற்றவைத்து ஊதி விட்டால் ஒரு பெரிய கடமையை முடித்து விட்டது போல் ஒரு சந்தோஷம், திருப்தி. பலமுறை பயன்படுத்திய எண்ணெய், பேப்பரில் இருந்த அச்சு மை, சிகரெட் புகை அத்தனையும் வயிற்றின் உள்ளே போய் வயிறை ஒரு வழி செய்துவிடும். அதோடு எண்ணெயில் உள்ள உடம்புக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு, ரத்த குழாய்களில் படிந்து ரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் பக்கவாதமும் மாரடைப்பும் வரும் என எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.
சென்னையில் வசிப்பவர்களில் 51 சதவீதம் பேருக்கு கெடுதல் விளைவிக்கும் கொழுப்பு அதிகமாகவும் நல்லது செய்யும் கொழுப்பு குறைவாகவும் இருக்கிறதாம். இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கம்தான். பொறித்த அயிட்டங்களை விரும்பி சாப்பிடுவதால் வரும் பிரச்னைதான் இது என்கிறார்கள். பொறியல், கூட்டு, சட்னி, சாம்பார், குழம்பு என அனைத்து வகையான உணவுகளிலும் தேங்காய் சேர்ப்பதும் புகை, மதுப் பழக்கமும் கொழுப்பு சேர்வதற்கு முக்கிய காரணங்கள் எனக் கூறும் இதய மருத்துவர்கள் இவற்றையெல்லாம் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.
பிரச்னை வந்தபிறகு துடிப்பதற்கு பதிலாக, வருவதற்கு முன்பே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை கடைப்பிடித்தால் நம்மால் நமது உறவுகளுக்கு ஏற்படும் வேதனையை தவிர்க்கலாம். கொழுப்பு மிகுந்த எண்ணெய் உணவுகள், மட்டன், சிக்கன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளில் இல்லாத சத்தும் பலமும் வேறு எதிலும் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம்.
Thanks : TAMILMURASU
கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு.
இதன் கிளைகள் வழுவழுவென்று காணப்படும். இலைகள் தடித்து காணப்படும். கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது.
கொய்யா, முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது..
கொய்யாப்பழம் கோடைக்காலங்களில்தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
கொய்யாவில் பலவகைகள் உள்ளன. இதன் பழங்கள் சிலவகை தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.
தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப் பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒருசில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான்.
கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா தான்.
மருத்துவப் பயன்கள்
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல்தான் நோயின் ஆரம்பம். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆற
இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.
கல்லீரல் பலப்பட
உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு
நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய் படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு.
இரத்தச்சோகை மாற
இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.
இதயப் படபடப்பு நீங்க
ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு
குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
* குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்
* சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.
* நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்க
அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் அஈஃ எனப்படும் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் (Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.
பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுப் பொருட்கள்!!
கீரை வகைகள்: உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் போலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன. எனவே இவை உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை.
முழு தானியங்கள்: முழு தானியங்களில் 96 விழுக்காடு வரை நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க
செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம்.
கொட்டை பருப்புகள்: பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள் உங்களது உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை ஆகும். புரதம், மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை காலை சிற்றுண்டியிலோ அல்லது சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம்.
இருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. மேலும் கொழுப்பு கலோரிகளை கொண்டதும் கூட. ஆனால் இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யக் கூடிய நல்லவகை கொழுப்பு ஆகும்.
மாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது. ஒரு வாரத்தில் 15 முதல் 20 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது.
தயிர்: குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பாக்டீரியாவும் தயிரில் உள்ளது.
வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக வெறும் தயிரில் பழங்கள் அல்லது பெர்ரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
நாவற்பழம்: பெரும்பாலான நார்சத்து உணவு தயாரிப்புகளில் நாவற்பழம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதில் அதிக அளவு நார்சத்து இடம் பெற்றிருப்பதுதான்.
மேலும் ஆன்டாசிடென்ட்ஸும் இதில் அதிகமாக உள்ளது. இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை ஒருவர் இதனை உட்கொண்டால் போதுமானது.
சத்தான விருத்தி தரும் செவ்வாழை!
எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண்நோய்
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி குணமடையும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும்
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தொற்றுநோய் தடுக்கப்படும்
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.