Saturday, July 28, 2012

ரமலான் சஹர் உணவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக சஹர் உணவு 






சிதம்பரம்; 27.07.12 நமது கிளையின் சார்பாக TNTJ மர்கசில் ரமலான் முழுவதும் சிதம்பரத்தில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவர்கள் ,வியாபார ரீதியாக தங்கும் வியாபாரிகள் ,அவசர தேவைக்காக மருத்துவத்திற்கு தங்கும் நபர்கள் ஆகியோருக்குகாக அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் சஹர் உணவு ஏற்பாடு செயல்பட்டு வருகின்றது.இதில் மாணவர்கள்,வியாபாரிகள்,உள்பட,தினமும் 175-நபர்களுக்கும் மேல், சாப்பிட்டு விட்டு திருப்திவுடன்  செல்கிறார்கள்,இதற்காக பொதுமக்கள்,வியாரிகள்,மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத்தை பாராட்டிவிட்டு செல்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Thursday, July 26, 2012

இமாம்க்கு தஃவா

சிதம்பரம்; 23.07.12 அன்று சுன்னத் பள்ளி இமாம் அவர்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஆதம்,மற்றும் நமது பள்ளி இமாம் ஹனீப்  அவர்கள்   எது நோன்பு என்று தலைப்பில் மற்றும் ரமளானில் நாம் மற்றும் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து,பல விதமான சந்தேகங்களுக்கு குரான், கதிஸ்யின் படி விளக்கம் அளித்தார்கள். .

Wednesday, July 25, 2012

அருள்வளம் மிக்க மாதம்





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பெருமானார் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தை அருள்வளம் மிக்க மாதம் என்று வர்ணித்துக் கூறினார்கள். ஒருவர்இவ்வுலகில் ஏராளமான பொருட் செல்வங்களை அடைந்திருப்பது அருள் வளம் அல்லகாரணம் இறைவனை மறுப்பவரிடமும்கூடபொருட்செல்வங்கள்குவிந்து கிடப்பதைப் பார்க்கின்றோம்.
இவ்வுலகில் யாரும் தனது திறமையினால் பொருள் வளங்களை அடைவதில்லை மாறாக  இறைவன்  தனதுநாட்டப்படியே நம்பிக்கையாளர்களுக்கும்மறுப்பாளர்களுக்கும்திறமையாளர்களுக்கும்திறமைஇல்லாதோருக்கும்)  கொடுக்கிறான்.

30:37. தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும்குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள்பார்க்கவில்லையாநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.345

ஒருவர் இவ்வுலகில் எத்தனை பொருள் வளங்களை பெற்றிருந்தாலும் அவைகள் அவருக்கு மறுமையில் உதவப் போவதில்லை அவைகள் உலகிலேயே துண்டிக்கப்பட்டு விடுகின்றது மாறாக அவர் செய்கின்ற நற்செயல்களும்,அந்த பொருள் வளங்களில் சிறிதை நிரந்தர நன்மை தரக்கூடிய காரியங்களில் பயன்படுத்துவதுமே மறுமையில் அவருக்கு உதவியாக அமையும்.

அதனால் மனிதன் உலகில் வாழும் பொழுது மறுமையில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான  நன்மைகள் கிடைப்பதே அருள் வளமாகும்.

நற்காரியங்களாற்றாமல் யாரும் நன்மைகளை அடைய முடியாதுநற்காரியங்களாற்றி அதற்கான நன்மைகளை இதர நாட்களை விட ரமளான் மாதத்தில் தான் கணக்கின்றி பெறமுடியும்.  

மனிதர்கள் செய்யும் நற்செயலுக்கான கூலி பத்திலிருந்து எழுநூறு மடங்காக பல்கிப் பெருகுகின்றன நோன்பைத் தவிறநோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன்எனது அடியான் எனக்காக தனது உணவையும்,இச்சiயையும் விட்டு விடுகிறான்என்று இறைவன் கூறுவதாக பெருமானார்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். புகாரி,முஸ்லீம்.

பிற மாதங்களில் செய்யப்படும் நற்செயலுக்கு 10 லிருந்து 700 வரை அந்தந்த நற்செயலுக்கு தகுந்தாற்போல்எழுதப்படுகிறது ஆனால் ரமளானில் மட்டும் கணக்கின்றி வழங்குகிறான் வல்லோன் அல்லாஹ்.

வல்ல அல்லாஹ்விடமிருந்து கணக்கின்றி பெறக் கூடிய நன்மைகளைக் கொண்டு எளிதாக சுவனத்திற்குசெல்லலாம். இது தான் அருள் வளங்களிலெல்லாம் உயர்வான அருள் வளமாகும்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்ய வேண்டும்
ரமளானில் செய்யப்படும் நற்காரியங்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று   இறைத்தூதர் கூறியதில்அசைக்க முடியாத  நம்பிக்கை கொண்டு நற்காரியங்கள் செய்ய வேண்டும்.

...நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்... அருள்மறைக்குர்ஆன் 3:171

ரமளானில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி 1901

வல்ல அல்லாஹ் ரமளானில் கணக்கின்றி கொடுக்கின்ற நன்மைகளைக் கொண்டு தீமைகளை அழித்து முடிக்கும்போது சொர்க்கத்தின் வாசல்கள் அவருக்காக ரமளானில் திறக்கப்படுகின்றதுநரகத்தின் வாசல்கள் பூட்டப்படுவதுடன் அல்லாஹ்வுக்காக நோற்க வேண்டும்நற்காரியங்களாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணம்ஒருவருக்கு வந்து விட்டால் பிற நாட்களில் அவரை பின் தொடரும் ஷைத்தானுக்கு வல்லோன் இறைவன்ரமளானில் விலங்கிட்டு விடுவான்.

ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றனநகரத்தின் கதவுகள் மூடப்பட்டுவிடுகின்றனஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது என்று இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறியதாகஅபூஹுரைரா(ரலிஅறிவித்தார்புகாரி: 3277.

இறைவனை சந்திக்கும் அரும் பாக்கியம்.
அல்லாஹ்வின் நோன்பை நோற்று அல்லாஹ்விடமிருந்து ஏராளமான நன்மைகளை அடைந்து அதன் மூலமாக தீமைகளை அழித்து சொர்க்கம் செல்வதற்கு தயரானவர் மறுமையில் இறைவனை சந்திக்கும் பாக்கியத்தைப் பெறுவார்.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி 1904.

அந்த சொர்க்கவாசி தனது இறைவனை தன்னுடைய இரு கண்களால் கண்டு மகிழ்ச்சி அடையும் விதம் இறைவன் அவருக்கு காட்சி அளிப்பான்அவரை மகிழ்ச்சி அடையும் விதம் இறைவன் நடத்துவான்.

அருள்வளம் மிக்க ரமளான் மாதத்தை அடைந்து அதில் நற்செயல்களை அதிகம் செய்து ஏகஇறைவனிடமிருந்து ஏராளமான கூலிகளைப் பெற்று அதன் மூலம் தீமைகளை அழித்து சொர்க்கம் சென்று இறைவனை கண்டு மகிழ்ச்சி அடையும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக ! 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....நன்றி; அதிரை ஏ.எம்.பாரூ

தனிநபர் தஃவா

சிதம்பரம்; 23.07.12 அன்று  சிதம்பரம் பூதகேணி முன்னால் பள்ளிவாசல் நிர்வாகி பதாபுல்லா அவர்கள்,நோன்பு ,மற்றும் தொழுகை சம்பதமான கேள்விகளுக்கு நமது பள்ளி இமாம்  ஹனீப் அவர்கள்,குரான்,ஹதீஸ்களில் இருந்து   விளக்கம் அளித்தார்கள்,பிறகு இது தான் சத்தியகொள்கை என்று ஏற்று தினம் தோறும நமது பள்ளிக்கு வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ் 

Tuesday, July 24, 2012

சிதம்பரம் கிளை சார்பாக இஃப்தார்!




சிதம்பரம்; அல்லாஹ்வின் கிருபையால்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக 
தவ்ஹீத் பள்ளியில், ஏரளமான மக்கள்  வந்து நோன்பு திறந்து செல்கின்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!

தனிநபர் தஃவா


சிதம்பரம்; 20.07.12 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தனிநபர் தஃவா செயபட்டது இமாம் ஹனீப் அவர்கள் இஸ்லாம் என்றால் என்ன? என்று  தஃவா செய்யப்பட்டது  

Sunday, July 22, 2012

தர்காக்களில் நடப்பது என்ன? – ஒரு புலனாய்வு ரிப்போர்ட்! காணத்தவறாதீர்கள்!


தர்காக்களில் நடப்பது என்ன? – முன்னோட்ட காட்சி!

60அடி பாவா, 45 அடி பாவாவாக மாறிய அதிசயம்(?)
கடிதம் எழுதிப்போட்டால் படித்துப் பார்த்து பதில் தரும் ராவுத்தர் அப்பா அவுலியா(?)
காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் அற்புத அவுலியா(?)
பீடிகளை காணிக்கை கேட்கும் பீடி மஸ்தான் அவுலியா(?)
செங்கற்களை உணவாக வழங்கும் சையது சுல்தான் அவுலியா(?)
நடக்கப்போவதை கனவில் சொன்னாரா ஆத்தங்கரை சையதம்மா(?)
அக்கு அக்காக கழன்று விடும் அவுலியாக்களின் உடல் பாகங்கள்(?)
தமிழ்நாட்டிலிருந்தே கஃபத்துல்லாவில் தொழும் அதிசயம்(?)
நெற்றிக்கண்ணால் அல்லாஹ்வை பார்க்கும் அற்புதம்(?)
எப்படியெல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்?
எப்படியெல்லாம் மக்கள் வழிகெடுகின்றார்கள்?
எப்படியெல்லாம் மக்களை வழிகெடுக்கின்றார்கள்?
என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கும் ஒரு புலனாய்வு ரிப்போர்ட் –
தர்காக்களில் நடப்பது என்ன?
தினந்தோறும் அதிகாலை 3.30மணிக்கு மெகாTV யில் காணத்தவறாதீர்கள்.
Print This page

Friday, July 20, 2012

ரமலான் சஹர் உணவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக சஹர் உணவு 




சிதம்பரத்தில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவர்கள் 


வியாபார ரீதியாக தங்கும் வியாபாரிகள் 


அவசர தேவைக்காக மருத்துவத்திற்கு தங்கும் நபர்கள் 


ஆகியோருக்குகாக  சஹர் உணவு .சென்ற வருடம் முதல்அல்லாஹ்வின் பேரருளால் செயல்பட்டு வருகின்றது... அதை தொடர்ந்து இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெற்றியடைய துவா செய்யுங்கள் 

மன அழுத்தத்திற்கு இஸ்லாமே தீர்வு.


இன்று உலகம் முழுதும் மக்கள் மனதை துவம்சம் செய்யும் ஒரு நோயாக மாறியிருப்பது இந்த "மன அழுத்தம்" என்பது. இந்த நோய்க்குதீர்வு தேடும் நோயாளிகளும், தீர்வு சொல்லும் மருத்துவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும்
 இந்த நோய்க்கு உரிய தீர்வை சரியான முறையில் யாரும் சொல்வதும் இல்லை. அதைத் தெரிந்து கொள்வதும் இல்லை. 

உலகில்
 உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதினால் உலகை உழுக்கும் இந்த "மனஅழுத்தத்திற்கு" தீர்வை இந்த மார்க்கம் தெளிவாகத் தருகின்றது. 

ரமலான் முழுவதும் அதிகாலை 03.30 முதல் 5.00வரை மெகா TV யில்

சகோதரர்
 பி. ஜெய்னுலாப்தீன் அவர்கள்.இதைப் பற்றிய தெளிவான விளக்ம் தருகின்றார்கள் . 

ரமலானுக்கு தயாராவோம்!!!


மனித சமுதாயத்தை சீர்திருத்த வந்த திருமறைக் குர்ஆன் இறங்கிய ரமலான் மாதம்நெருங்கிவிட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்காக இப்பொழுதே நாம் நம்மை தயார் படுத்தி இருப்போம். அதில் நம்மை சீர்திருத்திக்கொள்வதற்கு தயார் படுத்திக் கொண்டோமா ?
இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நம்மை சீர்திருத்திக்கொள்வதற்கான பயிற்சியை தொடங்குவோமாக !
நம்பிக்கை கொண்டோரேநீங்கள் (இறைவனைஅஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில்நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளதுதிருக்குர்ஆன்-2:183
ருசியுடன் உண்டு புசித்துப் பழகிய நாவை ரமலானுடைய நாளின் பாதிப் பகுதியில் உண்ணாமல் இருக்கப் பழக்கி இருப்போம். பொய் பேசாமல் இருக்கப்பழக்கினோமா ?
இல்லை என்றால்இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நாவை ரமலானில் பொய் பேசாமல் இருக்கப் பழக்குவோமாக !

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத்தேவையுமில்லை! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1903.
ஸஹர் மற்றும் இஃப்தாருக்கான உணவுகளை வகை வகையாக செய்து உண்டு மகிழ்வதற்கு தேவையான பொருள்களை இப்பொழுதே வாங்கி சேமிக்கத்தொடங்கி இருப்போம். ஆனால் அதில் உறவினர்களில் உள்ள ஏழை எளியோருக்கும்> நமது அருகில் வசிக்கும் ஏழை எளியோருக்கும் சிறிதை கொடுத்துஅவர்களும் நம்மைப் போல் ஸஹர் மற்றும் இஃப்தாரில் உண்டு மகிழ்வதற்கும் சேர்த்து வாங்கினோமா ?
இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் அவர்களுக்கும் தாராள மனதுடன் சிறிதை சேர்த்து வாங்குவதற்கு எண்ணம் கொள்வோமாக !இப்பொழுதே அந்த எண்ணம் வந்தால் தான் ரமலானில் வாரி வழங்கும் எண்ணம் உருவாகும்.
நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும்வேளையில் நபி(ஸல்) அவர்கள்அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும்வரை நபி(ஸல்)அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விடஅதிகமாகநபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1902.
இரவிலும்> பகலிலும் நேரம் தவறாமல் உறங்கிப் பழகிய கண்களை ரமலான் மாதத்தில் மாற்றி உறங்குவதற்கும் குறைத்து உறங்குவதற்கும் இப்பொழுதேபழக்கி இருப்போம். ஆனால் சினிமா பார்க்காமல் இருப்பதற்கு பழக்கினோமா ?
இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் சினிமா பார்க்காமல் இருப்பதற்கு பழக்கிக்கொள்வோமாக! (இஃப்தாரிலிருந்து ஸஹர் வரை பலருடையவீட்டில் (ரூமில்) சினிமா ஒடவே செய்கிறது சிலருடைய வீட்டில் (ரூமில்) நோன்பு நேரத்திலும் கூட சினிமா ஓடுவதை அறிந்து வருகிறோம்.)
நோன்பை நோற்றால் அது விரசமான சிந்தனையை தடுக்கும் என்று சத்திய மார்க்கத்தின் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் நோன்புகாலங்களிலும் விரசத்தைத் தூண்டும் சினிமாவை பார்க்கலாமா ?
உங்களில்> திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்)பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 1905.
ரமலானுக்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் ரமலானில் பொய் பேசாமால், சினிமா பார்க்காமல், இருக்கவும் வாரி வழங்கும் எண்ணத்தை எற்படுத்தும் பயிற்சியை தொடங்குவோமாக !
நோன்பின் சட்ட திட்டங்களை முழுமையாக அறிந்து கொள்ள கீழ்காணும் லிங்கை சொடுக்கவும்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நன்றி;அதிரை ஏ.எம்.ஃபாரூக்
Top of Form
Bottom of Form
Top of Form