Wednesday, July 25, 2012

அருள்வளம் மிக்க மாதம்





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பெருமானார் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தை அருள்வளம் மிக்க மாதம் என்று வர்ணித்துக் கூறினார்கள். ஒருவர்இவ்வுலகில் ஏராளமான பொருட் செல்வங்களை அடைந்திருப்பது அருள் வளம் அல்லகாரணம் இறைவனை மறுப்பவரிடமும்கூடபொருட்செல்வங்கள்குவிந்து கிடப்பதைப் பார்க்கின்றோம்.
இவ்வுலகில் யாரும் தனது திறமையினால் பொருள் வளங்களை அடைவதில்லை மாறாக  இறைவன்  தனதுநாட்டப்படியே நம்பிக்கையாளர்களுக்கும்மறுப்பாளர்களுக்கும்திறமையாளர்களுக்கும்திறமைஇல்லாதோருக்கும்)  கொடுக்கிறான்.

30:37. தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும்குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள்பார்க்கவில்லையாநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.345

ஒருவர் இவ்வுலகில் எத்தனை பொருள் வளங்களை பெற்றிருந்தாலும் அவைகள் அவருக்கு மறுமையில் உதவப் போவதில்லை அவைகள் உலகிலேயே துண்டிக்கப்பட்டு விடுகின்றது மாறாக அவர் செய்கின்ற நற்செயல்களும்,அந்த பொருள் வளங்களில் சிறிதை நிரந்தர நன்மை தரக்கூடிய காரியங்களில் பயன்படுத்துவதுமே மறுமையில் அவருக்கு உதவியாக அமையும்.

அதனால் மனிதன் உலகில் வாழும் பொழுது மறுமையில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான  நன்மைகள் கிடைப்பதே அருள் வளமாகும்.

நற்காரியங்களாற்றாமல் யாரும் நன்மைகளை அடைய முடியாதுநற்காரியங்களாற்றி அதற்கான நன்மைகளை இதர நாட்களை விட ரமளான் மாதத்தில் தான் கணக்கின்றி பெறமுடியும்.  

மனிதர்கள் செய்யும் நற்செயலுக்கான கூலி பத்திலிருந்து எழுநூறு மடங்காக பல்கிப் பெருகுகின்றன நோன்பைத் தவிறநோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன்எனது அடியான் எனக்காக தனது உணவையும்,இச்சiயையும் விட்டு விடுகிறான்என்று இறைவன் கூறுவதாக பெருமானார்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். புகாரி,முஸ்லீம்.

பிற மாதங்களில் செய்யப்படும் நற்செயலுக்கு 10 லிருந்து 700 வரை அந்தந்த நற்செயலுக்கு தகுந்தாற்போல்எழுதப்படுகிறது ஆனால் ரமளானில் மட்டும் கணக்கின்றி வழங்குகிறான் வல்லோன் அல்லாஹ்.

வல்ல அல்லாஹ்விடமிருந்து கணக்கின்றி பெறக் கூடிய நன்மைகளைக் கொண்டு எளிதாக சுவனத்திற்குசெல்லலாம். இது தான் அருள் வளங்களிலெல்லாம் உயர்வான அருள் வளமாகும்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்ய வேண்டும்
ரமளானில் செய்யப்படும் நற்காரியங்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று   இறைத்தூதர் கூறியதில்அசைக்க முடியாத  நம்பிக்கை கொண்டு நற்காரியங்கள் செய்ய வேண்டும்.

...நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்... அருள்மறைக்குர்ஆன் 3:171

ரமளானில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி 1901

வல்ல அல்லாஹ் ரமளானில் கணக்கின்றி கொடுக்கின்ற நன்மைகளைக் கொண்டு தீமைகளை அழித்து முடிக்கும்போது சொர்க்கத்தின் வாசல்கள் அவருக்காக ரமளானில் திறக்கப்படுகின்றதுநரகத்தின் வாசல்கள் பூட்டப்படுவதுடன் அல்லாஹ்வுக்காக நோற்க வேண்டும்நற்காரியங்களாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணம்ஒருவருக்கு வந்து விட்டால் பிற நாட்களில் அவரை பின் தொடரும் ஷைத்தானுக்கு வல்லோன் இறைவன்ரமளானில் விலங்கிட்டு விடுவான்.

ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றனநகரத்தின் கதவுகள் மூடப்பட்டுவிடுகின்றனஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது என்று இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறியதாகஅபூஹுரைரா(ரலிஅறிவித்தார்புகாரி: 3277.

இறைவனை சந்திக்கும் அரும் பாக்கியம்.
அல்லாஹ்வின் நோன்பை நோற்று அல்லாஹ்விடமிருந்து ஏராளமான நன்மைகளை அடைந்து அதன் மூலமாக தீமைகளை அழித்து சொர்க்கம் செல்வதற்கு தயரானவர் மறுமையில் இறைவனை சந்திக்கும் பாக்கியத்தைப் பெறுவார்.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி 1904.

அந்த சொர்க்கவாசி தனது இறைவனை தன்னுடைய இரு கண்களால் கண்டு மகிழ்ச்சி அடையும் விதம் இறைவன் அவருக்கு காட்சி அளிப்பான்அவரை மகிழ்ச்சி அடையும் விதம் இறைவன் நடத்துவான்.

அருள்வளம் மிக்க ரமளான் மாதத்தை அடைந்து அதில் நற்செயல்களை அதிகம் செய்து ஏகஇறைவனிடமிருந்து ஏராளமான கூலிகளைப் பெற்று அதன் மூலம் தீமைகளை அழித்து சொர்க்கம் சென்று இறைவனை கண்டு மகிழ்ச்சி அடையும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக ! 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....நன்றி; அதிரை ஏ.எம்.பாரூ

No comments:

Post a Comment