சிதம்பரம், ஜுலை 10: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 08. 0 7 .2012 அன்று சிதம்பரம் TNTJ மர்கசில் மாவட்ட தலைவர் D.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் திரளான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வத்தோடு வந்திருந்தனர்.
காலை 10 . 30 மணியளவில் தொடங்கிய இந்த செயற்குழுவின் தொடக்கத்தில் "அழைப்பு பனியின் அவசியங்கள் " என்ற தலைப்பில் மெளலவி.அப்துல் மஜீத் உமரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
பின்னர் அனைத்து கிளை நிர்வாகிகளும் தலா இரண்டு நிமிடங்கள் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.
இதனை தொடர்ந்து மாநில மாணவரணி சகோ.சித்திக் அவர்கள் மற்ற அமைப்புகளுக்கும் TNTJ விற்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கினார்.
தொழுகைக்கும் , உணவிற்கும் இடைவெளிவிட்டு மதியம் இரண்டு மணிக்கு தொடங்கிய இரண்டாம் அமர்வின் முதலில் ”முஸ்லிம்கள் மத்தியில் கிறிஸ்த்துவத்தை எப்படியெல்லாம் கிறிஸ்த்துவர்கள் விதைக்கிறார்கள் அதை எப்படி முஸ்லிம்கள் முறியடிக்க வேண்டும் என்று மிக தெளிவாக விளக்கினார் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி சகோ.தாங்கள் ஹபீப்.
அதையெடுத்து "இன்றைய இளைஞர்கள்" என்ற தலைப்பில் மாநில மாணவரனி ஒருங்கினைப்பாளர் பரங்கிபேட்டை கலீல்லூர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக "மக்கள் மத்தியில் எப்படியெல்லாம் தஃவாவை கொண்டு செல்வது” என்பது பற்றி மாணவரணி சித்திக் மிக தெளிவாக விளக்கினார்.
தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு மாலை 4 மணியளவில் முடிவடைந்தது கடலூர் மாவட்ட செயற்குழு!
தீர்மானகள் :
1 ) சிதம்பரம் TNTJ மர்கஸ் அருகே உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
2 ) 3.5 சதவீதம்யுள்ள உள்ள இட ஒதுக்கீடை 7 சதவீதமாக அதிமுக அரசு உயரத்தினால் வருகின்ற பாரளுமன்ற தேர்தலில் அதிமுக - விற்கு TNTJ ஆதரவு கொடுக்கும்.
என்பது போன்ற இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அச்சு அடிக்கப்பட்ட பிரசுரங்களான ”எது நோன்பு” என்று தலைப்பில் அடிக்கப்பட்ட பிரசுரமும், ”ரமளானில் நாம்” என்ற தலைப்பில் அடிக்கப்பட்ட பிரசுரமும், மற்றும் ”நோன்பின் மாண்புகள்” ஆகிய தலைப்புகளில் அடிக்கப்பட்ட மொத்தம் முப்பதாயிரம் பிரசுரங்கள் (A4 சைசில்) இரு பக்கமும் அச்சடிக்கப்பட்டு ரமலானில் அனைத்து கிளைகளிலும் விநியோகம் செய்ய பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
புதிய பல செய்திகளை அறிந்தவர்களாக செயற்குழு உறுபினர்கள் மற்றும் நிர்வாகிகள் புத்துணர்வுடன் சென்றனர்.
கடலூர் மாவட்ட செயற்குழுவை நல்ல முறையில் நடத்தி கொடுத்த அல்லாஹ்விற்கே எல்லாம் புகழும்!
No comments:
Post a Comment