Saturday, October 27, 2012

சிதம்பரத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை! நபிவழியை நடைமுறைப்படுத்த அணி திரண்ட மக்கள் கூட்டம்!!




சிதம்பரம்; 27.10.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளையின் சார்பாக,அம்பலத்தாடி மடதெருவில் உள்ள மர்கஸ் வளாகத்தில்  ஹஜ் பெருநாள் தொழுகை  நடைபெற்றது.இதில் மௌலவிஹனீப் அவர்கள் தொழுகைநடத்தி இப்ராஹிம் நபியின் தியாகம்  பற்றி சொற்பொழிவுஆற்றினார்கள் . 
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நபிவழியை நிலைநாட்ட ஆண்களும் பெண்களும் கடந்த காலங்களை விட மிக அதிகமாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, October 10, 2012

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மதி மழுங்கச் செய்து அடிமைகாளாக்கி வரும் Facebook & Twitter

சமீபத்தி்ல சிக்காக்கோவில் உள்ள  Chicago Booth School of Business classified  என்ற பல்கலைகழகம் ஜெர்மனியில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. 18 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.


தற்போதைய சமுதாயத்தினர் எதில் அதிகம் மோகம் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளியாகிள்ளது.
தங்களின் பார்ட்னரிடம் செல்வதை விட Facebook & Twitter இடம் செல்வதை தான் தற்போதை சமுதாயத்தினர் அதிகம் விரும்புகின்றனர். அதில் தான் அதிக மோகம் கொண்டுள்ளனர். அதை விட்டு அவர்களால் வெளியே வர முடிவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்ஸ் மற்றும் சிகிரெட்டில் கிடைக்கும் இன்பத்தை விட Facebook மற்றும் Twitter ல் இன்றைய சமுதாயத்திற்கு அதிக இன்பம் கிடைக்கின்றதாகவும் அது எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் எங்கு வேண்டுமானாலும் எப்பொழு வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் அதில் தான் அவர்கள் அதிகம் மோகம் கொள்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கின்றது…
இன்றைய இளைய சமூதாயம் Facebook மற்றும் Twitter ல் மூழ்கி கிடக்கும் காரணத்தை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளது சிக்காக்கோ பல்கலைகழகம்.
இப்படி மோகம் கொள்ள காரணம் என்ன என்பதை பார்ப்போம்:
அனைவருக்கும் புரியும் விதத்தில் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் இரண்டு இணையதளங்களும் ”மாமா”  வேலையை தான் பார்க்கின்றனர். அதை தொழில் நுட்ப ரீதியாக செய்கின்றனர். இவைகளை eMaMa என அழைத்தால் அது மிகையாகாது.
பஸ்டாண்டு பஸ்டாண்டா அழைந்து, தெரு தெருவா சுத்தி, பல மணி நேரம் வெயிட் பன்னி, பொண்ணு பையன தேட்ரதும் பையன் போன்ன தேட்ரதும் அந்த காலம். ஆனா இப்ப உக்காந்த இடத்துல இருந்துக்கிட்டே பொண்ணு தான் விரும்பிய பையன் கிட்ட கடல போடவும் பையன் தான் விரும்பிய போண்ணு கிட்ட கடல போடவும் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் தான் இந்த  Facebook மற்றும் Twitter.
”ஒருத்தன், ஒருத்தி” என்பதெல்லாம் போய் ஒரே நேரத்துல ஒரு பையன் பல பொண்ணுங்க கிட்டயும் ஒரு பொண்ணு பல பையங்க கிட்டயும் Facebook மற்றும் Twitter ல் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். அதனால் தான் செக்ஸ் சிகிரட்டை விட அதிக மொகம் இதில் வருகின்றது.
இதில் நடக்கும் பல கூத்துக்கள் செய்திகள் படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தன்னோட தங்கச்சி கிட்டயே Facebook மற்றும் Twitter ல் கடல போட்ட அண்ணங்க நிரைய பேரு இருங்காங்க.
வேறு யாரோன்னு நினைச்சு தன்னோட மனைவி கிட்டயே கடல போட்டு மாட்டிக்கிட்ட புருசன் எத்தனை பேரு..
போண்டாட்டி புருசன் கிட்ட மாட்டிக்கிட்ட கதை..
அம்மா மகன், அப்பா போன்னு இப்படி எழுவதற்கே கை கூசும் அளவிற்கு இதில் அசிங்கள் அறங்கேரிக் கொண்டிருக்கின்றது..
ஏதாவது ஒரு பெயர் மற்றும் படத்தை போட்டு கணக்கை துவங்கி விடுகின்றனர்.  பிறகு கண்ணுல பட்ரவங்கிட்டயெல்லாம் கடல போட்ரது.. அதான் EMaMa க்கள் (facebook & twitter) இருக்காங்களே அங்க இங்க இருக்கவங்களோட போட்டோ பேயரயெல்லாம் வழிய வந்து காட்ரதுக்கு.. தேவையானத செலக்ட் பன்னிக்க வேண்டியது தான்!
இதில் ஏமாந்து தங்களது கற்பை, பணத்தை இழந்தவர்களின் பட்டியல் ஏராளாம் உள்ளது.
பெற்றோர்களுக்கு..
வெளிநாட்டில் இருக்கும் பெற்றவர்கள் நம்ம புல்ல நல்லா படிக்கட்டும் ன்னு கம்யுட்டர், செல்போனு, இன்டர்நெட்டுன்னு வாங்கி கொடுத்து விடுங்கின்றனர். பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என கண்கானிப்பது இல்லை வீட்டில் உள்ள பெண்களுக்கு விபரம் தெரியாது. பிள்ளைகள் , பெற்றவர்கள் வாங்கிக் கொடுத்ததை நல்லவற்றிற்கு பயன்படுத்தாமல் இது போன்று சீரழிந்து போய் விடுகின்றனர்..
பிள்ளைகளுக்கு செல்போன்களை வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.  ஏன் எனில் தற்போதைய பெரும்பாலான போன்களில் இந்த இரண்டு eMaMa க்களும் இலவச இணைப்பாக வருகின்றனர்.
கணிணையை பொறுத்தரை அறிவை வளர்ந்து கொள்வதற்கு அது இன்றைக்கு மிகவும் அவசியமானது. எனினும் பிள்ளைகள் அதை இது போன்று தவறான விசயங்களுக்கு பயன்படுத்த விடாமல் தடுக்க ஏராளமான Parent control மென்பொருள்கள் உள்ளது.
உதாணரத்திற்கு ஒன்றை குறிப்பிடுகின்றோம்:
இதை கணிணியில் நிறுவி வி்ட்டால் இது போன்று சோசியல் நெட்வொர்க் இணையதளம் மட்டுமல்லாமல் மற்ற தேவையில்லாத எல்லா இணையதளத்தையும் இது  தானாக ப்ளாக் செய்து விடும். அது போன்ற இணையதங்களை கணிணியில் பிள்ளைகளால் பார்க்க முடியாது.
Facebook மற்றும் Twitter போன்ற இணையதளங்கள் நல்லதிற்கு ஆரம்பிக்கப்பட்டதோ கேட்டதற்கு ஆரம்பிக்கப்பட்டதோ எதுவாக இருந்தாலும், கேட்டவைகளுக்கு தான் தனது சேவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என தெரியவந்தும் அதை தடுக்க அல்லது நிறுத்த முயற்சி எடுப்பது தான் சமுதாய நலம் கொண்ட நிறுவனங்களின் கடமை.
ஆனால் சமுதாய நலனை மறந்து விட்டு பணம் சம்பாதிப்பதற்காக சமுதாய சீர்கேடுகளை ஊக்கப்படுத்தும் வண்ணம் தினந்தோறும் பல்வேறு வசதிகளை வழங்கி  இளைய சமுதாயத்தை தன் பக்கம் அடிமையாக்கி வைத்துள்ளது இந்த இணையதளங்கள்.
விழித்துக் கொண்டவர் பிழைத்து கொண்டார்!
பேஸ்புக்கில் 83 மில்லியன் போலி கணக்குகள் இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பேஸ்புக்கே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
source: www.tntj.net

வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.07.10.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'ஹஜ்ஜின் சட்டங்கள்' பற்றி உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா

மாணவர்கள்க்கான தர்பியா
 
பின்னத்தூர்; 07.10.12  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பின்னத்தூரில் மாணவர்கள்க்கான தர்பியா மற்றும் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'இன்றைய இளைஞர்களின் நிலை'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதிகமான மாணவர்கள்  கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மானியம் அடூர் கிளையின் தஃவா

சிதம்பரம் அருகில் உள்ள மானியம் அடூர் -கிளையில் தஃவா,மற்றும் பயான்கள் 

                    பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பதிவேடு 
                         வாராந்திர பயான் 

              சமுதாய விழிப்புணர்வு ப்ளக்ஸ் போர்டுகள் 

ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி


இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
ஏழைகளின் துயர் துடைப்பது குர்பானியின் அடுத்த நோக்கமாக அமைந்துள்ளது. இதனால்தான் வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் இக்கட்டளையைத் திரும்பப் பெற்றார்கள்.
ஏழைகளின் துயர் துடைப்பதும் குர்பானியின் நோக்கம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுக்கப்பட்டு வாங்குவோரின்றி மாமிசம் சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய மாமிசம் கிடைக்காமல் ஏழைகள் திண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.
இந்த ஏற்றத் தாழ்வை அகற்றி ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் வழங்கும் ஆடு மாடுகளை டிஎன்டிஜே தலைமைக்கு வழங்கினால், தேவையான பகுதிகளில் முறையாக வினியோகம் செய்து அதன் கணக்கு விபரத்தை உணர்வில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆடு மாடுகள் தரத்திற்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாலும், ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவதாலும், கடைசி நேரத்தில் விலை ஏற்றப்படுவதாலும் உத்தேசமாகத்தான் இதற்கான தொகையை நிர்ணயிக்க இயலும்.
மாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு மாடு ரூபாய் 9,000 முதல் 10,000 வரை உள்ளது. அறுத்து வெட்டி கூறுபோட்டு பங்கிடுவதற்கான கூலியும் உள்ளது. எனவே நடுத்தரமான விலையில் மாடு வாங்கி அதற்கான கூலியும் சேர்த்து 10,500 வரை ஆகலாம். எனவே முழுமையாக ஒரு மாடு கொடுக்க விரும்புவோர் ரூபாய் 10,500 அனுப்பி வைக்குமாறும், ஒரு மாட்டில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொடுக்க விரும்பினால் ஒரு பங்குக்கு 1500 ரூபாய்கள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
மாடு ஒரு பங்குக்கு – ரூ.1,500

குர்பானிக்கான புக்கிங் & தொடர்புக்கு 
செயலாளர்              A.இப்ராஹிம்                      9751412122
துணை செயலாளர்    S.தாஜித்தின்                        9150742972 
        பொருளாளர்          M.M.முஹம்மது ஹனீப்   9150742971 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அம்பலத்தாடி மடத் தெரு 
சிதம்பரம் 


Tuesday, October 9, 2012

ஹாஜிகளுக்கு ஹஜ் பயிற்சி -விளக்கம்

சிதம்பரம்; 06.10.12 சனிக்கிழமையன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக லப்பை தெருவில் ஒரு சகோதரர் வீட்டில் சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்ஹாஜிகளுக்கு ஹஜ் பயிற்சியும் மற்றும்,விளக்கமும் அளித்தார்கள்.இதில் அதிகமான .பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்


சிதம்பரம்; 06.10.12 சனிக்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில் சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'தனித்து விளங்கும் இஸ்லாம்'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான .பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

திரு குர்ஆன்அன்பளிப்பு



சிதம்பரம்; 06.10.12  அன்று  முருகன் என்ற சகோதரர்க்கு மவ்லவி ஹனீப் அவர்கள் இஸ்லாம் குறித்து பலவிதமான கேள்விகளுக்கு, விளக்கி  தஃவா செய்தார்கள் கிளை செயலாளர் இப்ராஹிம், மற்றும் நிர்வாகி ஹஜ்  சகோ PJ தமிழாக்கம் திருகுர்ஆன் வழங்கினார்கள்   
     அல்ஹம்துலில்லாஹ். 

Tuesday, October 2, 2012

வாராந்திர பயான்-- சிதம்பரம்

சிதம்பரம்; 30.09.12 சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'புறம பேசுதல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

மாபெரும் இலவச கண் மற்றும் இரத்த வகை முகாம்- பின்னத்தூர்


பின்னத்தூர்; 29.09.12: அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்னத்தூர் கிளை நடத்தும் மாபெரும் இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம். நடைபெற்றது இதில் 60க்கும் மேற்பட்டோர் இரத்த வகை தெரிந்து கொண்டார்கள் . இதில் கலந்துகொண்ட 40 நபர்கள் இரத்தம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.இந்நிகழ்ச்சியில் மவ்லவி ஹனீப் அவர்கள,கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,கலந்துகொண்டு சிறப்பாக நடத்தினார்கள்.
           அல்ஹம்துலில்லாஹ்.  .

நான் முஸ்லிம் தஃவா

கடைகளில் நான் முஸ்லிம் தஃவா 

சிதம்பரம்; 29.09.12  சரவணன் என்ற மாற்று மத சகோதரர்க்கு   சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  கடைகளில்  இஸ்லாம் பகுத்தறிவு மார்க்கம் பற்றி  தஃவா செய்யபட்டது அவர்கள் இஸ்லாம் குறித்து பலவிதமான கேள்விகளுக்கு,மவ்லவி ஹனீப் அவர்கள் விளக்கி தெளிவு படு தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.  
அவர்களுக்கு அல்லாஹ்  நேர் வழி காட்டுவானாக.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – சிதம்பரம் கிளை

 தாயத்து அறுத்து எறியப்பட்டது 

சிதம்பரம்; கிளையின் சார்பாக 28-9-2012 அன்று நமது இமாம் மவ்லவி ஹனீப்   அவர்கள் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு  தாயத்து  கயிறு கழற்றி எரியப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தஃவா

கடைகளில் தஃவா 

சிதம்பரம்; 28.09.12  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடைகளில் தனி நபர் தஃவா செய்யபட்டது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் ''தொழுகையின்அவசியம்பற்றி' பற்றி விளக்கி தஃவா செய்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.