சமீபத்தி்ல சிக்காக்கோவில் உள்ள Chicago Booth School of Business classified என்ற பல்கலைகழகம் ஜெர்மனியில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. 18 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
தற்போதைய சமுதாயத்தினர் எதில் அதிகம் மோகம் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளியாகிள்ளது.
தங்களின் பார்ட்னரிடம் செல்வதை விட Facebook & Twitter இடம் செல்வதை தான் தற்போதை சமுதாயத்தினர் அதிகம் விரும்புகின்றனர். அதில் தான் அதிக மோகம் கொண்டுள்ளனர். அதை விட்டு அவர்களால் வெளியே வர முடிவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஸ் மற்றும் சிகிரெட்டில் கிடைக்கும் இன்பத்தை விட Facebook மற்றும் Twitter ல் இன்றைய சமுதாயத்திற்கு அதிக இன்பம் கிடைக்கின்றதாகவும் அது எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் எங்கு வேண்டுமானாலும் எப்பொழு வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் அதில் தான் அவர்கள் அதிகம் மோகம் கொள்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கின்றது…
இன்றைய இளைய சமூதாயம் Facebook மற்றும் Twitter ல் மூழ்கி கிடக்கும் காரணத்தை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளது சிக்காக்கோ பல்கலைகழகம்.
இப்படி மோகம் கொள்ள காரணம் என்ன என்பதை பார்ப்போம்:
அனைவருக்கும் புரியும் விதத்தில் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் இரண்டு இணையதளங்களும் ”மாமா” வேலையை தான் பார்க்கின்றனர். அதை தொழில் நுட்ப ரீதியாக செய்கின்றனர். இவைகளை eMaMa என அழைத்தால் அது மிகையாகாது.
பஸ்டாண்டு பஸ்டாண்டா அழைந்து, தெரு தெருவா சுத்தி, பல மணி நேரம் வெயிட் பன்னி, பொண்ணு பையன தேட்ரதும் பையன் போன்ன தேட்ரதும் அந்த காலம். ஆனா இப்ப உக்காந்த இடத்துல இருந்துக்கிட்டே பொண்ணு தான் விரும்பிய பையன் கிட்ட கடல போடவும் பையன் தான் விரும்பிய போண்ணு கிட்ட கடல போடவும் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் தான் இந்த Facebook மற்றும் Twitter.
”ஒருத்தன், ஒருத்தி” என்பதெல்லாம் போய் ஒரே நேரத்துல ஒரு பையன் பல பொண்ணுங்க கிட்டயும் ஒரு பொண்ணு பல பையங்க கிட்டயும் Facebook மற்றும் Twitter ல் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். அதனால் தான் செக்ஸ் சிகிரட்டை விட அதிக மொகம் இதில் வருகின்றது.
இதில் நடக்கும் பல கூத்துக்கள் செய்திகள் படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தன்னோட தங்கச்சி கிட்டயே Facebook மற்றும் Twitter ல் கடல போட்ட அண்ணங்க நிரைய பேரு இருங்காங்க.
வேறு யாரோன்னு நினைச்சு தன்னோட மனைவி கிட்டயே கடல போட்டு மாட்டிக்கிட்ட புருசன் எத்தனை பேரு..
போண்டாட்டி புருசன் கிட்ட மாட்டிக்கிட்ட கதை..
அம்மா மகன், அப்பா போன்னு இப்படி எழுவதற்கே கை கூசும் அளவிற்கு இதில் அசிங்கள் அறங்கேரிக் கொண்டிருக்கின்றது..
ஏதாவது ஒரு பெயர் மற்றும் படத்தை போட்டு கணக்கை துவங்கி விடுகின்றனர். பிறகு கண்ணுல பட்ரவங்கிட்டயெல்லாம் கடல போட்ரது.. அதான் EMaMa க்கள் (facebook & twitter) இருக்காங்களே அங்க இங்க இருக்கவங்களோட போட்டோ பேயரயெல்லாம் வழிய வந்து காட்ரதுக்கு.. தேவையானத செலக்ட் பன்னிக்க வேண்டியது தான்!
இதில் ஏமாந்து தங்களது கற்பை, பணத்தை இழந்தவர்களின் பட்டியல் ஏராளாம் உள்ளது.
பெற்றோர்களுக்கு..
வெளிநாட்டில் இருக்கும் பெற்றவர்கள் நம்ம புல்ல நல்லா படிக்கட்டும் ன்னு கம்யுட்டர், செல்போனு, இன்டர்நெட்டுன்னு வாங்கி கொடுத்து விடுங்கின்றனர். பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என கண்கானிப்பது இல்லை வீட்டில் உள்ள பெண்களுக்கு விபரம் தெரியாது. பிள்ளைகள் , பெற்றவர்கள் வாங்கிக் கொடுத்ததை நல்லவற்றிற்கு பயன்படுத்தாமல் இது போன்று சீரழிந்து போய் விடுகின்றனர்..
பிள்ளைகளுக்கு செல்போன்களை வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். ஏன் எனில் தற்போதைய பெரும்பாலான போன்களில் இந்த இரண்டு eMaMa க்களும் இலவச இணைப்பாக வருகின்றனர்.
கணிணையை பொறுத்தரை அறிவை வளர்ந்து கொள்வதற்கு அது இன்றைக்கு மிகவும் அவசியமானது. எனினும் பிள்ளைகள் அதை இது போன்று தவறான விசயங்களுக்கு பயன்படுத்த விடாமல் தடுக்க ஏராளமான Parent control மென்பொருள்கள் உள்ளது.
உதாணரத்திற்கு ஒன்றை குறிப்பிடுகின்றோம்:
இதை கணிணியில் நிறுவி வி்ட்டால் இது போன்று சோசியல் நெட்வொர்க் இணையதளம் மட்டுமல்லாமல் மற்ற தேவையில்லாத எல்லா இணையதளத்தையும் இது தானாக ப்ளாக் செய்து விடும். அது போன்ற இணையதங்களை கணிணியில் பிள்ளைகளால் பார்க்க முடியாது.
Facebook மற்றும் Twitter போன்ற இணையதளங்கள் நல்லதிற்கு ஆரம்பிக்கப்பட்டதோ கேட்டதற்கு ஆரம்பிக்கப்பட்டதோ எதுவாக இருந்தாலும், கேட்டவைகளுக்கு தான் தனது சேவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என தெரியவந்தும் அதை தடுக்க அல்லது நிறுத்த முயற்சி எடுப்பது தான் சமுதாய நலம் கொண்ட நிறுவனங்களின் கடமை.
ஆனால் சமுதாய நலனை மறந்து விட்டு பணம் சம்பாதிப்பதற்காக சமுதாய சீர்கேடுகளை ஊக்கப்படுத்தும் வண்ணம் தினந்தோறும் பல்வேறு வசதிகளை வழங்கி இளைய சமுதாயத்தை தன் பக்கம் அடிமையாக்கி வைத்துள்ளது இந்த இணையதளங்கள்.
விழித்துக் கொண்டவர் பிழைத்து கொண்டார்!
பேஸ்புக்கில் 83 மில்லியன் போலி கணக்குகள் இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பேஸ்புக்கே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
source: www.tntj.net
No comments:
Post a Comment