Thursday, May 31, 2012

தவ்ஹீத் கோட்டையாக மாறிய லால்பேட்டை!



லால்பேட்டை;அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 29.05.2012 அன்று பல்வேறு தடைகளை தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை சார்பாக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் (மாநாட்டில்) ஆயிரக்காணக்னேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் அருகே உள்ள காலடிபேட்டை கிளையில் இனையதளத்தின் நேரடி ஒளிப்பரப்பை மர்கசில் பார்க்க ஏற்பாடு செய்துயிருந்தணர். மேலும் புதுகோட்டை, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை போன்ற பல மாவட்டங்களில் பல கிளைகளில் இது போன்ற நேரடி ஒளிபரப்பினால் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடை செய்திட வேண்டும் என சுன்னத் ஜமாஅத் உள்பட பல்வேறு அமைப்பினர் சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை தகர்க்கும் வண்ணம் ஆயிரக்காணக்னேர் கலந்து கொண்டனர். அல்லாஹ் அக்பர்.

பாதுகாப்பிற்க்காக ஏரளாமான போலீசார் குவிக்கப்பட்டுயிருந்தணர். எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் அல்லாஹ்வின் அருளாளல் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! 





சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்

சிதம்பரம்;28.05.12 திங்கள்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'இஸ்லாத்தில் மறு ஜென்மம் உண்டா ?என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntjபள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தாவா

பின்னதூர்;28.05.12 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சத்தியமார்க்கத்தை சொல்பவர்கள் யார்? என்று சகோதரர்களிடம் ஆதரங்களுடன் சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்களால்விளக்கப்பட்டது.

Monday, May 28, 2012

கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி!


சிதம்பரம் :அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக மாணவர்கான“கோடைகால பயிற்சி முகாம்” 10.05.2012 முதல்20.05.2012 வரை பத்து நாட்களாக நடத்தப்பட்டு .அதன் பிறகு 2-நாள்கள்மாணவர்களுக்கு, தேர்வு நடைப்பெற்றது,அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி 27.05.12 மாலை 05-மணி முதல் துவங்கி இஷா வரை நடைபெற்றது அதில் முதாலாம் பரிசு முதல் தொடர்ச்சியாக 20.பரிசுகளும்,மற்றும் அதில் கலந்துகொண்ட63.மாணவர்களுக்கும் ஆறுதல்பரிசும்வழங்கப்பட்டது.










நிகழ்ச்சியில்சிதம்பரம் டவுன்ஹாஜ்,செல்லப்பா,உசேன்,இஸ்மாயில்,மற்றும் பள்ளி நிர்வாகிகள்,மாணவர்களின் பெற்றோர்களும்,ஆண்களும்,பெண்களும்,கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சிகளை,ak.தாஜ்தீன் (மாவட்ட பொருளாளர்)ஒருங்கினைக்க,தலைவர் ஷேக் முகமது உரை துவங்கி ,இமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

Thursday, May 24, 2012

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி!



சிதம்பரம் : அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக மாணவர்கான“கோடைகால பயிற்சி முகாம்” 10.05.2012 முதல்20.05.2012 வரை பத்து நாட்களாக நமது பள்ளி இமாம் மெளலவி.ஹனீப் அவர்களால் நடத்தப்பட்டு .
அதன் பிறகு 2-நாள்கள்மாணவர்களுக்கு, தேர்வு நடைப்பெற்றது,




இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 27.05.12 பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில்60-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




Tuesday, May 22, 2012

சிதம்பரம் பகுதிகளில் வாராந்திர பயான்கள்


சிதம்பரம் கொள்ளுமேட்டு தெரு பெண்கள் பயான்:

சிதம்பரம்;19.05.12சனிக்கிழமை அன்று இரவு 07-மணிக்கு  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாககொள்ளுமேட்டுதெருவில்,ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்' நபிகளாரை நேசிப்போம் ' என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார். பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் வாராந்திர பயான்

சிதம்பரம்;.20.05.12 சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'அல்லாஹ்வின் வல்லமை ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்

சிதம்பரம்;21.05.12 பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில்'மக்களைதவ்ஹீத் ஜமாஅத்ஈர்ப்பது ஏன்;என்ற தலைப்பில் மவ்லவி ஹனீப்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

மாநாடாக மாறிய கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்!







கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக் கூட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டை மிஞ்சும் அளிவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பியது.
சகோதரர்கள் அமர்வதற்கு கூட இடமில்லா நின்று கொண்டும் சுவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொற்பொழிவை கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. மேலும் இரண்டு சகோதரர்களும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தங்களை வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்லாஹம் லில்லாஹ்!
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஆன்லைன் பி.ஜே. இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடுத்தி நிறுத்திட வேண்டும் என சுன்னத் ஜமாஅத் உள்பட பல்வேறு அமைப்பினர் இரவு பகலாக  பெருமளவு பணத்தை செலவு செய்து சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை முறியடிக்கம் வண்ணம் பொதுக் கூட்டம் மாநாடாக மாறியது குறிப்பிடதக்கது. எல்லா புகழும் இறைவனுக்கே.
விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும்.








source: www.tntj.net