Monday, July 16, 2012

கடலூர் மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!


கடலூர், ஜுலை 15 : கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் காலிப் பணியிடங்களுக்கான  பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கலெக்டர் ராஜேந்திர ரத்னு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கீழ்கண்ட பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இரண்டு காலியிடங்கள் உள்ள பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 

ஒரு பணியிடம் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துனர், கணக்காளர் மற்றும் இரு பணியிடங்களுக்கான சமூக நலப் பணியாளர் பதவிக்கு 8,000 ரூபாய் மாத தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.


ஒரு காலிப் பணியிடம் உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு 5,000 ரூபாய் மாத தொகுப்பூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.ஏ., - பி.சி.ஏ., - பி.எஸ்சி., புள்ளியியல், கணிதம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இரு காலியிடங்கள் உள்ள புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கு 4,000 ரூபாய் மாத தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இப்பதவிக்கு பிளஸ் 2 அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இப்பணியிடங்களுக்கான அனைத்து பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இப்பணியிடங்களுக்குத் தேவையான வயது, கல்வித்தகுதி, விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை www.cuddalore.tn.nic.in  என்ற கடலூர் மாவட்ட இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதிக்குள் கண்காணிப்பாளர், அரசினர் கூர்நோக்கு இல்லம், அண்ணாமலை நகர், ஐ.டி.ஐ., பின்புறம், சாவடி, கடலூர்-607 004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து புகைப்படத்துடன் 25.07.2012 மாலை 5.30 மணிக்குள், கண்காணிப்பாளர், அரசினர் கூர்நோக்கு இல்லம், அண்ணாமலை நகர், ஐ.டி.ஐ பின்புறம், சாவடி, கடலூர் மாவட்டம்-607 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு 04142-203050, 9894241784 என்ற எண்ணையோ, நேரிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்களே,

முஸ்லிம்களாகிய நாம் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (EMPLOYMENT OFFICE) நமது படித்த படிப்புகளை பெரும்பாலும் பதிவு செய்வதே கிடையாது. சொற்பமானவர்களை தவிர்த்து.

நமக்கு என்ன கவர்மெண்ட் வேலையா கிடைக்க போகுது??? (நம்ம மவூத்த போனா பிறகுதான் வேலை வரும் என்று எல்லாம் கூறுவோம்) என்று அலட்சியமாக இருப்போம். 

நமக்கு துபை, சவூதிதான் லாய்க்கு என்று இருப்போம்.  பாஸ்போர்ட் எடுக்க மட்டும்தான் அரசு அலுவகலுக்கு செல்வோம் என்று நினைக்கிறோம்.

எது எதர்கோ வீண் செலவு செய்து கொண்டும் நேரத்தை ஒதுக்கி கடலூர் செல்லும் நாம் வேலை வாய்ப்பு அலுவலுகத்தில் பதிவு செய்வதில் அலட்சியமாக இருகின்றோம்.

தற்போது தமிழகத்தில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடும் மேலும் இந்த இட ஒதுக்கீடு உயர்த்தால்ப்பட்டால் நிறைய முஸ்லிம் சகோதரர்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகயுள்ளது.

ஆகவே அலட்சியம் பாரமல்  நாம் வேலைவாய்ப்பு அலுவகத்தில் நமது தகுதிகளை பதிவு செய்து வைப்போம். என்று சிதம்பரம்  TNTJ சார்பாக அன்புடன் கேட்டுகொள்கின்றோம்

No comments:

Post a Comment