Tuesday, January 3, 2012

"மிக மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட அழகான மார்க்கம்"

"இஸ்லாம் " என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்டமாத்திரத்தில் தெரிந்தோ தெரியாமலோ மதம் சார்ந்த/சாரா கொள்கையுடையவர்களுக்கு ஒருவித வெறுப்புஏற்படுகிறது. ஏன் ?

 இஸ்லாம் இந்த மனித சமுகத்திற்கு அளித்தது என்ன?மனித சமுகத்திலிருந்து அழித்தது என்ன? என்றுஅலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


 முதலில் யாவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்., இஸ்லாம் சுமார் 1400 வருடங்களுக்கு முன்பாக அரேபிய பாலையில் முஹம்மது நபியால் தொடங்கப்பட்ட மதமல்ல.,

    மாறாக முஹம்மது நபி அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமே இஸ்லாம்.ஏனெனில் மனித மூலத்தின் ஆதி பிதா மண்ணில் படைக்கப்பட்டதிலிருந்தே இஸ்லாம் மனித மனங்களில் உலாவர துவங்கிய மார்க்கம்.

 இத்தெரிவை ஆயிரம் முறை உலகுக்கு அறிவுறுத்தியும் ஆயிரத்தொருமுறை இவ்வுலகு அதனை தவறாக புரிந்துக்கொண்டது அல்லது இவ்வுலகிற்கு தவறாக புரிய வைக்கப்பட்டது., எனவே தான் இஸ்லாம் குறித்து "மிக மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட அழகான மார்க்கம்" என பெர்னார்ட் ஷா கூறினார்.

     ஏனைய மதங்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை ஒரு வரையறுத்தலின்றியே வைத்திருக்கும் இக்காலக்கட்டத்தில் இஸ்லாம் மட்டுமே மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்னமே அதன் கொள்கை கோட்பாடுகளை முன்மொழிந்து அது எக்காலத்திற்கும் எதற்காகவும் யாருக்காகவும் நெகிழ்வடையாது என உரக்கக்கூறிய மார்க்கம்.

    ஆனால் இன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்லாத்திற்கு எதிராக நடுநிலை சிந்தனை தவிர்த்த ஏனையோரால் அநாகரிகத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி விமர்சனம் என்ற பெயரில் தன்னின் மட்டரக எண்ணங்களுக்கு நாகரிக ஆடை கட்டி நாடெங்கிலும் நடமாட விட்டு மகிழ்கின்றனர்.அதிலும் இணையத்தில் விமர்சிப்போர்  தங்கள் வார்த்தை வாகனத்தில் வன்முறை எழுத்துக்களையே வறுத்தமின்றி சுமந்து வருகின்றனர்.

    இஸ்லாமிய (?) பயங்கரவாதத்தை வேரறுக்கிறோம் எனகூறி எழுத்து பயங்கரவாதத்தை அமோகமாகஇணையத்தில் அறுவடை செய்கிறார்கள்.அவர்களிடம்நாம் கேட்டு கொள்வது எல்லாம் ஒன்று தான்"இஸ்லாம் முன் மொழியும் எந்த ஒரு நடைமுறை சட்டம்இன்று மனித சமுகத்திற்கு பொருந்தாது? என்பதைகுறித்து விமர்சனம் செய்யுங்கள்
 
    இவ்வாறு கேட்ட மாத்திரத்தில் "உலகமெங்கிலும்நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? என்பதேஏனையோரின் எதிர்கேள்வியாக இருக்கும். உங்களோடுசேர்ந்து நாங்களும் கேட்கிறோம்...உலகமெங்கிலும்நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..?இஸ்லாமும் அது கூறும் வழி முறைகளுமா...? அல்லதுஇஸ்லாமிய பெயரில் அறியாமையால் செய்யும்தனிமனித அல்லது சுயநலம் விரும்பும் சமுககுழுக்களா...?

    எங்கோ உயிர்க்கொலைகள் -முகவரியில்லா முஸ்லிம் முகங்கள் செய்வதாக கூறப்படுபவை உண்மையல்ல.அஃது அது உண்மையென்றால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல! ஏனெனில் எந்த காரணமுமின்றி ஒருவனை கொலை செய்தவன் சமுகம் முழுவதையும் கொலை செய்தவன் போலாவான் என்ற நபிவழியில் வார்ர்த்தெடுக்கப்பட்டவர்கள் தான் உண்மை முஸ்லிம்கள்.

       ஆப்கானிய தாலிபான்களையும், எங்கோ இருக்கும்அல் கொய்தாவையும் விடுங்கள் (அவர்கள் செய்வதைநானறியேன்)  உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும்முஸ்லிம்கள் எத்தனை முறை உங்களை வாளெடுத்துவெட்ட வந்திருக்கிறார்கள்? தாங்கள் இல்லாத பொழுதுஎத்தனை முறை உங்கள் வீட்டு பெண்கள் மற்றும்குழந்தைகளை தாக்க முற்பட்டிருக்கிறார்கள்...?
  
     அல்லது யாரும் இல்லாதபோது உங்கள் வீடுகள்குண்டு வைத்து எத்தனை முறை தகர்க்க பட இருந்தது...?சற்று நடு நிலையோடு சிந்தித்து சொல்லுங்கள்   இஸ்லாமல்லாத இணைய சகோதர்களே மேற்கத்தியஊடகங்களின் பயங்கரவாத சாட்சியாக சித்தரிக்கபடும்முஸ்லிம்கள் ஆளுயர ஆடையும், அதைவிட பெரிதாகஆயுதமும் கொண்டு காட்சியளிக்கும் நிலை மாற்றி.,

    உங்கள் தெரு கோடியில் டீ கடை வைத்திருக்கும் அப்துல் ரஹ்மானும்,உங்கள் கண்ணெதிரே ஐஸ்கிரிம் வண்டி தள்ளும் அப்துல்லாஹ்வும் முஸ்லிம்கள் தான் என்பதை உணருங்கள்.

   இஸ்லாமின் ஏனைய ஆக்கங்கள் குறித்து விமர்சனம்எழுதுவதை விட பர்தா குறித்து எழுவதேஅதிகம்,அனைத்திற்கும் பதில் அளித்தாலும்மீண்டு(ம்) அவர்களிடம் முளைக்கும் கேள்வி ஏன்கட்டாய படுத்துகிறீர்கள்? இக்கேள்விக்கு முன்இம்மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லைஎன்பதன் அர்த்தம் அறிவார்களா குர்-ஆனை கரைத்துகுடித்த இந்த அரைகுறை அறிவு ஜீவிகள்,.

   இஸ்லாம் முன் மொழியும் பர்தா (அது பெண்களுக்குமட்டுமானது அல்ல பார்க்க :அல்குர்ஆன்-24:30)  இந்த சமுகபெண்களுக்கு எத்தகைய கேடுகளை விளைவித்தது?பர்தா அணிந்த பெண்களை நெருப்பில் விழுந்தவிட்டில்களாக வர்ணிக்க முற்படுவோர் இஸ்லாம் ஏன்பெண்களுக்கு அவ்வாறு கூறுகிறது என்ற உண்மையேஅறிந்துக்கொண்டே மறுக்காதீர்கள்.(பர்தா குறித்து மேலும் அறிய)

    அதுப்போலவே பலதார மணமும்.,
   பலதார மணத்தை எதிர்ப்போர் வாழும் நாட்டில் தான் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுறை அணியுங்கள் என விபச்சாரத்தின் வாசலுக்கு  விளம்பர விலாசம் தரப்படுகிறது.

   மேலும் சீன்ன வீடு என்றும் வைப்பாட்டிகள்என்றும் பெண்களுக்கு உயர் அந்தஸ்து(?) வழங்கவதைபலதார மணம் முற்றாக தவிர்க்கிறதே அதற்காகவாஇஸ்லாத்தின் மீது கோபம்? இதை எதிர்ப்போர் முதலில்"இன்று உலகில் நடைபெறும் விபச்சாரம் முழுவதையும்சின்ன வீட்டு பிரச்சனைகளையும் முற்றாக ஒழியுங்கள்

  பின்பு நாமும் ஒத்துக்கொள்கிறோம் பலதார மணம் வேண்டாம் என்று. இங்கு தடுப்பது ஒரு விசயமல்ல ஒழிப்பது தான் முக்கியம்.அதை தான் இஸ்லாம் சொன்னது, செய்யவும் சொன்னது. இஸ்லாமியனாக பிறக்கும் எல்லா முஸ்லிம்களும் நான்கு மனைவிகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது மார்க்கம் வலியுறுத்தும் கட்டாய கடமையல்ல...அது ஒரு சலுகை மட்டுமே...அதற்கு உங்கள் வீடுகளுக்கு அருகாமையில் வாழும் முஸ்லிம்களே சாட்சி!

   இணைய சகோதரர்களே தாங்கள் தாராளமாக இஸ்லாத்தின் மீது ஆதாரத்தோடு குற்றச்சாட்டை முன் வையுங்கள்.உங்களுக்காக பதில் தர இஸ்லாம் காத்திருக்கிறது உங்களது எண்ணங்களை சந்தேகமாக வையுங்கள் ஆனால் காழ்ப்புணர்ச்சியில் மட்டும் வேண்டாம். இன்று இஸ்லாமியர்களை விட அஃதில்லாதோர் தான் இஸ்லாத்தில் குறை கண்டுபிடிக்கும் நோக்கில் இஸ்லாமிய நூல்களை அதிகமாக பார்வையிடுகிறார்கள்

   அல்ஹம்துலில்லாஹ்! தனக்கு அறவே பிடிக்காது என்று சொல்வனவற்றோடு தான் தங்கள் அன்றாட வாழ்வை கழிக்கிறார்கள்.இது தான் இஸ்லாம் மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம்.நீங்கள் இஸ்லாத்தை நேசிக்க வேண்டாம் உங்கள் எண்ணங்கள் உண்மையே சுவாசிக்கட்டும் ஏனெனில் இஸ்லாம் பற்றி அறிய அதுவே முதற்படி

 ஏன் இஸ்லாம் என இஸ்லாத்தில் குறை காண புறப்பட்டவர்களின் தேடுதல் நடுநிலையோடு இருந்ததனால் தான் மால்கம்X ,பிலால் பிலிப்ஸ் போன்றோர்கள் முதல் இன்று பெரியார்தாசன் வரை சொல்லிக்கொள்கிறார்கள் "என் இஸ்லாம்"

குறிப்பு:இன்று நீங்களோ, நானோ இஸ்லாத்திற்கு வருவதாலோ, வெளியேருவதாலோ இஸ்லாத்திற்கு எந்த உயர்வும், தாழ்வும் இல்லை மாறாக நன்மையும் தீமையும் நமக்கே!   
     
   எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (இறுதி வேதம் 2:146)
                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்

No comments:

Post a Comment