Thursday, January 31, 2013

சர்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபம் படத்தை வெளியிடலாமா? மாநிலத் தலைவர் விளக்கம்!




சிதம்பரம்;31.01.13:சர்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபம் படத்தை வெளியிடலாமா? – மாநிலத் தலைவர் விளக்கம்!








விஸ்வரூபத்தை நிரந்தர தடை செய்யகோரி TNTJ பேரணி ஆர்பாட்டம் & கலெக்டரிடம் மனு!




சிதம்பரம;31.01.13 தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக நேற்று (30.01.2013) மாவட்ட தலைவர் முத்துராஜா தலைமையில் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் விஸ்வரூபத்தை நிரந்தர தடை செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. 


அந்த மனுவின் விபரம்:- 

அணைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் என்ற திரைபடத்தை எடுத்து அதில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், இஸ்லாம் மார்க்கம் தீவிரவாதத்தை தூண்டுகின்றது என்பதை போன்று படமெடுத்து மற்ற சமூக மக்கள் மத்தியில் இஸ்லாம், முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதம் தான் என்ற பொய் கருத்தை மக்கள் மத்தியில் விதைத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரை படத்தை கடலூர் மாவட்டத்தில் எங்குமே திரையிடவிடாமல் தடை செய்யுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக அன்புடன் கேட்டுகொள்கிறோம் . 

என மாவட்ட தலைவர் கையெழுத்திட்டு மனு வழங்கப்பட்டது . 

கலெக்டர் பங்களாவிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை TNTJ-வை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கள் குழந்தைகளோடு பேரணியாக சென்று மனு கொடுத்தனர். 

மாவட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் சென்று மனு கொடுத்து விஸ்வரூபம் திரைப்படத்தால் ஏற்படும் சட்ட ஒழுங்கை விளக்கி கூறினர். 

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள் TNTJ வின் நியாயமான கோரிக்கையை அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த ஏராளமான TNTJ சகோதர, சகோதரிகளை நோக்கி சமூக விரோதிகள் கல் எறிந்தனர். இந்த கல்வீச்சில் முஹம்மத் அலி என்கிற சகோதரர் லேசான காயம் அடைதார். 

ஆவேசம் அடைந்த TNTJ வினரும் போலீசாரும் கல் எறிந்த சமூக விரோதிகளை தேடினர். கரெண்ட் கட்டாகி இருந்த காரணத்தால் சமூக விரோதிகள் தப்பினர். 

அமைதியாக கலெக்டரிடம் மனு கொடுத்துகொண்டிருந்தவர்கள் மீது அநியாயமாக கல்வீச்சு நடத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த TNTJ சகோதர சகோதரிகள் விஸ்வரூபத்தை தடை செய்ய கோரியும், கல் எறிந்த சமூக விரோதிகளை கைது செய்ய கோரியும் கடும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த DSP உள்ளிட்ட உயர் அதிகாரிகள் TNTJ வினரை சமாதான படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

அதன் பிறகு தொலைகாட்சி மற்றும் பத்திரிகை நிருபர்கள் TNTJ நிர்வாகியிடம் பேட்டி கண்டனர்.

அல்லாஹு அக்பர்!












Monday, January 28, 2013

விஸ்வரூபம் - அடுத்தது என்ன? [வீடியோ]

மற்றும் இந்நிகழ்ச்சி சிதம்பரம்கிளை சார்பாக நமது மர்க்கஸில் அனைவரும் பார்க்க ஏற்பாடு செய்ய பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
                     



சென்னை, ஜன 28: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை மண்னடியில் விஸ்வரூபம் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் உரை நிகழ்த்தினார்.

Sunday, January 27, 2013

இஸ்லாமிய சட்டமே தீர்வு! மாபெரும் பொதுக்கூட்டம்

இஸ்லாமிய சட்டமே தீர்வு! மாபெரும் பொதுக்கூட்டம் - நேரடி ஒளிபரப்பு

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை

சிதம்பரம்;.25.01.13 அன்று  அப்துல் ரஜாக் அவர்கள் 'பாவ மன்னிப்பு' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, January 24, 2013

விஸ்வரூபம் படத்திற்கு, தமிழகம்,புதுவை,ஐதராபாத்,துபாய் இலங்கை தொடர்ந்து ......தடை .அல்ஹம்துலில்லாஹ்!



புதுச்சேரியிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை!
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டு விஸ்வரூபம் திரைப்படத்தை புதுச்சேரியில் தடை விதிக்கக் கோரி நேற்று தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் புதுச்சேரி மாநில முதல்வரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலி்ல்லாஹ்!
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வரிடம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அளித்த
புகார்: http://www.tntj.net/128439.html

விஸ்வரூபம் படத்தை கேரளாவில் தடைசெய்ய வேண்டும்” , TNTJ கேரள மண்டல பத்திரிக்கை செய்தி!

விஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதிக்கவேண்டும் என நேற்று (23-1-2013) தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கேரளா மண்டலம் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது.
இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும் என அந்த செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி கேரள பத்திரிக்கைகளில் வெளியானது.

தவ்ஹீத் ஜமாஅத் முயற்சி : இலங்கையில் விஸ்வரூபம் 
திரைப்படத்திற்கு தடை! அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக சித்தரித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளிவரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக ஜனாதிபதி, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியோரது கவணத்திற்கு விஸ்வரூபம் பிரச்சினை கொண்டுவரப்பட்டது.
இறுதியாக இன்று காலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நிர்வாகிகள் நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் மூலமாக இன்று ஜனாதிபதியுடன் முஸ்லிம் எம்.பி க்கள் நடத்திய சந்திப்பில் இது தொடர்பாக பேசும்படி வேண்டிக் கொண்டதுடன் விஸ்பரூபத்தைத் தடை செய்வது குறித்த ஆவணங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்கள்.
சற்று நேரத்திற்கு முன்பு இலங்கை திரைப்படக் கூட்டுத் தாபனத்துடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நிர்வாகிகள் மேற்கொண்ட அவசர சந்திப்பில் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பில் செய்திகளைக் கேட்டறிந்த திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரைப்படம் என்பது பொழுது போக்காக இருக்க வேண்டுமே தவிர ஒரு மதத்தை நிந்தனை செய்வதாக இருக்கக் கூடாது. இதுவரை இலங்கையில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு நாம் இந்த நிபந்தனையைத் தான் விதித்துள்ளோம். ஆகவே இது தொடர்பாக சரியான முடிவெடுக்கப்படும்என்றும் தெரிவித்ததுடன் திரைப்படத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாகவும், திரைப்படத்தின் காட்சிகளை முஸ்லிம் தலைவர் மற்றும் புத்தி ஜீவிகளுக்கு திரையிட்டுக் காட்டிய பின்பே தொடர்ந்தும் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தம்.
இதே வேலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக நாளை 25.01.2012 ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து நடை பெறவிருந்த சினி சிட்டி திரையரங்கம் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகின்றது.


விஸ்வரூபம் படம் துபையில் வெளியாகவில்லை!

முஸ்லிம்களையும் , இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள கமல் இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (24-1-2013) துபையில் வெளியாக இருந்து விஸ்வரூபம் படத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. National Media Council அதிகாரிகள் இது குறித்து கூறுகையில்
”இந்த படத்தில் முஸ்லிம்கள் கொலை செய்வது போன்றும் குண்டு வைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது இது மிகவும் சென்சிடிவ் ஆன விசயம், இந்த படத்தை நாங்கள் இன்னும் review செய்து முடிக்கவில்லை இது குறித்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்படும்”எனக் கூறியுள்ளனர்.




”படத்தை தயாரிப்பவர்கள் சமூக அக்கரையுடன் நடந்து கொள்ள வேண்டும்” தடையை வரவேற்றுள்ள இயக்குனர் சீமான்!


விஸ்வரூபம் படத்தை இந்திய அளவில் தடை செய்ய அவசர தந்தி அனுப்ப வேண்டிய வாசகம்:
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 24, 2013, 12:47
To,
The Prime minister
Soniya Gandhi
Manish thivari
Sushil kumar Shinde
We Request you to take necessary action to ban Viswaroobam movie which maligns Islam, hurting Muslim sentiments.It will disrupt the communal harmony.It’s already banned by Tamil Nadu government, so we kindly request you to ban Viswaroobam movie across the country, so that peace remains mainatained throughout our country.
To
Mamtha
Mulayam
We Request you to take necessary action to ban Viswaroobam movie which maligns Islam, hurting Muslim sentiments.It will disrupt the communal harmony.It’s already banned by Tamil Nadu government.we need your support in banning this movie across the country, so that peace remains mainatained throughout our state.
To
Lalu Prasad yadav
We Request you to take necessary action to ban Viswaroobam movie which maligns Islam, hurting Muslim sentiments.It will disrupt the communal harmony.It’s already banned by Tamil Nadu government.We need your support in banning this movie across the country, so that peace remains mainatained throughout our country.

Address:
The Prime Minister’s Office
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 101.
Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857
Smt. Sonia Gandhi
10, Janpath
New Delhi.
Tel. (O) : 23792263, 23019080
Tel. (R) : 23014161, 23014481
Fax : 23018651
Manish Tawary
C – I/3, Lodhi Garden,
New Delhi – 110 003
Tels. (011) 24644627, 24644628
Fax.(011) 24658384
Sushilkumar Shinde
North Block ,
New Delhi-110001
New Delhi-110003
+91 11 23092462
+91 11 23094686
+91 11 23094221 (Fax)
Mamata Banerjee
C-4, M.S. Flats, B.K.S. Marg,New Delhi-110 001
Phone    011-23722975,011-23381213,011-23386645,033-24753000
Fax 011-23319555,011-23387333,033-24540880
Mulayam
16, Ashoka Road,New Delhi – 110 001
011-23736300,0522-2235477
Lalu
25, Tughlak Road,New Delhi -110 011
Phone 0612-2203067
மற்ற அனைத்து துறை அமைச்சர்களின் முகவரி தொலைபேசி எண்களை அறிய :http://www.sarkaritel.com


விஸ்வரூபம் திரைபடத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை வரவேற்றுள்ளார் நகடிரும் இயக்குனருமான சீமான். சினிமாக்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரப்பதையே ஆண்டு ஆண்டுகளாமாக வழக்கமாக்கி வருகின்றனர். இந்த போக்கை சினிமாத் துறையினர் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சீமான் இதை தெரிவித்துள்ளார்.
படத்தை தயாரிப்பவர்கள் சமூக அக்கரையுடன் நடந்து கொள்ள வேண்டும்,துப்பாக்கி படத்திலேயே இது போன்று பிரச்சனை கிழம்பியது , பிரச்சனை வரும் என்று தெரிந்தே கமல் இதை செய்திருக்கின்றார் எனவும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
திரைத்துறையில் உள்ள சக இயக்குனரே தமிழக அரசின் தடையை வரவேற்றுள்ளது குறிப்பிடதக்கது.

விஸ்வரூபம் திரைப்படம்: மனிஷ் திவாரியின் கருத்திற்கு பதிலடி கொடுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்

டேம் 999” படத்தின் தடையை நீக்க முடியாது வழக்கை டிஸ்மிஸ் செய்த சுப்ரிம் கோர்ட்!


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தவுடன் அதை எதிர்த்து கமல் இன்று (24-1-2013) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கு மதியத்திற்கு பிறகு விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாட்சா மற்றும் நீதிபதி சாந்த குமார் நீதிபதி வெங்கட்ராமன் அடங்கிய பென்ச் படத்தை தற்போது அனுமதிக் முடியாது எனக் கூறி வழக்கை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
மேலும் படத்தை பார்த்த பின்னர் தான் முடிவு எடுக்க முடியும்என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற 26 ஆம் தேதி படத்தை பார்க்க நீதிபதிகள் திட்டமிட்டுள்ளனர்.
தனிக்கை துறை அனுமதி அளித்த பின்னர் படத்தை தடை செய்வது சட்டப்படி குற்றம்என்பது கமல் மற்றும் இன்னும் சிலரின் வாதம்.
ஆனால் அதை நிராகரிக்கும் வன்னம் தற்போது நிதிபதிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
தனிக்கை துறை அனுமதி அளித்துள்ளது என்றாலும்படத்தை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தற்போது கூறியுள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளே படத்தை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் எனக் கூறியுள்ள நிலையில்,   நமது நாட்டின் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சாரக உள்ள மனிஸ் திவாரி தனிக்கை துறை அனுமதி அளித்த பிறகு சாதாரணமாக எந்த படத்தையும் தடை செய்து விடக்கூடாதுஎன்ற கருத்தில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

டேம் 999” படத்தின் தடையை நீக்க முடியாது – வழக்கை டிஸ்மிஸ் செய்த சுப்ரிம் கோர்ட்!


999 படத்துக்கான தடையை நீக்க மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தடையை நீக்கக் கோரும் தயாரிப்பாளர் சோகன்ராயின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. படம் தயாரிக்கும் போது மக்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியார் அணை உடைவது போன்ற காட்சி உள்ளதால் தமிழக அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

-தினகரன் 24-1-2013

Tuesday, January 22, 2013

கலைஞருக்கு TNTJ விவாத அழைப்பு!




ரிசானா விவகாரம் : கலைஞர் வைத்த வாதம் சரியா?

இலங்கை பெண்மணி ரிசானாவிற்கு சவூதி அரசு மரணதண்டனை அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இஸ்லாமிய விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் இது குறித்து அறிக்கை ஒன்றை கடந்த 21.01.2013 அன்று வெளியிட்டுள்ளார்.


மரணதண்டனைக்கு முடிவு கட்ட உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்ற தலைப்பில் அவரது அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தன்னை இலக்கியவாதி, முற்போக்குவாதி என்று சொல்லிக் கொள்ளும் மனுஷ்ய புத்திரன் என்பவர் நக்கீரன் இதழில் பொய்யின் மறுவடிவமாகவும், புளுகு மூட்டையின் மொத்த உருவமாகவும் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி, அதையே தனது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்டு நமக்கு ஆச்சர்யம்தான்.

மனுஷ்ய புத்திரன் என்பவர் தனது கட்டுரையில் எழுதிய செய்திகளை அப்படியே நம்பி அதையே தனது கட்டுரையிலும் எழுதி பொய்(யரு)க்கு உரம் சேர்த்துள்ள கலைஞரிடத்தில் சில கேள்விகள்:

ஒருவர் ஒரு செய்தியை சொல்கின்றார் என்றால் அதுகுறித்த செய்திகளை ஆய்வு செய்யாமலும், அதற்குரிய ஆதாரங்களைக் கேட்காமலும் அதை அப்படியே நம்பிவிடுவீர்களா?
அதற்கு ஆதாரம் எதையும் கேட்க மாட்டீர்களா? அதை ஆய்வு செய்ய மாட்டீர்களா?
உங்களைப் பற்றியும் உங்களது குடும்பத்தார் பற்றியும் ஜெயலலிதா விடக்கூடிய அறிக்கைகள் அனைத்தையும் அப்படியே நம்பி ஏற்று அதை ஆராயாமல், அதற்குரிய சான்றுகளைக் கேட்காமல் அதை உண்மை என்று சொல்லி மற்றவர்கள் உங்களைப் பற்றி ஜெயலலிதா விட்ட அறிக்கையை அப்படியே வெளியிட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு கலைஞர் அவர்கள் நமக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்.

மனுஷ்ய புத்திரனது அனைத்து ஆதாரங்களும் பொய்கள்; புளுகு மூட்டைகள்; அவதூறுகள்; அநியாயங்கள் என்று அடுக்கடுக்கான சான்றுகளுடன் நாம் நிரூபித்துள்ளோம். அந்த சான்றுகளை கலைஞருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

ரிசானாவிற்கு அநியாயமாக மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் கலைஞரின் வாதம். அந்த வாதத்திற்கு தனிக்கட்டுரையில் விரிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மனுஷ்ய புத்திரன் சொன்ன பொய்களைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் கலைஞர் தனது அறிக்கையில் கூடுதலாக ஒரேயொரு வாதத்தைத்தான் முன் வைத்துள்ளார்.

வண்ணாரப்பேட்டை சம்பவம் :

சென்னை வண்ணாரப்பேட்டையில் 3மாத குழந்தைக்கு அதன் தாய் பாலூட்டிய போது, அந்தக் குழந்தைக்கு பால் புரையேறி மூச்சுத்திணறி அது இறந்து விட்டது. இந்த சம்பவம் கலைஞரின் அறிக்கை வெளியாவதற்கு முந்தைய நாள் செய்தித்தாள்களில் வந்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டி இதுபோல ரிசானா பால் கொடுக்கும் போதும் பால் புரையேறி மூச்சுத்திணறி 4மாத குழந்தை இறந்திருக்கலாம் அல்லவா என்பதுதான் கலைஞரின் வாதம்.

இது எவ்வளவு பெரிய அபத்தமான வாதம்?. ஒரு குற்றச் செயல் சம்பந்தமாக பேசும்போது மற்றொரு விபத்தை அத்துடன் ஒப்பிட்டு பேசினால் அறிவுடையோர் அதை ஏற்றுக் கொள்வார்களா?

அந்த குற்றத்தை சம்பந்தப்பட்டவர் செய்தாரா? இல்லையா?
அதற்குரிய ஆதாரங்கள் என்ன?
அந்த ஆதாரங்கள் உண்மையானவையா?
இதைத்தானே அறிவுடையோர் ஆராய்வார்கள்.
இந்த அடிப்படை விஷயம் கலைஞருக்கு தெரியாததா?

ஒருவரை மாடியில் இருந்து கீழே தள்ளி ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்த கொலைகாரன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்திற்கு ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதுதான் அறிவுடையோர் செயல். அதைவிட்டுவிட்டு இந்த கொலைச் சம்பவம் உண்மையா இல்லையா என்பதை அன்றைய தினம் செய்தித்தாளில் வந்த செய்தியை வைத்து எந்த அறிவாளியும் முடிவு செய்யமாட்டார்.

இன்று நான் செய்தித்தாள் படித்தேன். அதில் இருவர் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் கால் தவறி கீழே விழுந்து செத்துவிட்டார் என்ற செய்தி அதில் இருந்தது. அதுபோல கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுபவரும் கால் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் அல்லவா? என்று யாராவது கேட்டால் அது எப்படி அறியாமையாக இருக்குமோ அதுபோலத்தான் கலைஞரின் வாதமும் அமைந்துள்ளது.

இது குறித்து கலைஞருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில், மரணதண்டனை கூடாது என்பது உங்களது கொள்கையாக இருக்குமானால், நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மைதான் என்று சொல்வீர்களேயானால், மனுஷ்ய புத்திரன் கூறிய பொய்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்குமேயானால் அதை தக்க ஆதாரங்களுடன் மறுக்கும் எங்களிடத்தில் நீங்கள் விவாதிக்க முன்வரவேண்டும் என்று கலைஞருக்கு விவாத அழைப்பு விடப்பட்டுள்ளது. 

கடிதத்தை காண 
Click Here