Friday, March 29, 2013

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை

சிதம்பரம்;.29.03.13 அன்று யாசின்  அவர்கள் பெண்ணாடம்  'தனி பள்ளி எதற்கு? ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, March 24, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.24.03.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் இமாம் சாபி அவர்கள் ;அர்ரஹீம் நிகரற்ற அன்புடையோன்' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

பரங்கிப்பேட்டையில் இளைஞர்களுக்கான தர்பியா!



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக “இளைஞர்களுக்கான தர்பியா” நேற்று (23.03.2013) பரங்கிப்பேட்டை ”மஸ்ஜிதுத் தவ்ஹீத்” (TNTJ மர்கஸ்) பள்ளியில் நடைபெற்றது.

அஸர் தொழுகைக்கு பிறகு ஆரபிக்கப்பட்ட முதல் அமர்வில் “இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி” மாவட்ட பொருளாளர் சகோ.சிராஜ் மற்றும் மாவட்ட பேச்சாளர் மெளல்வி.ஷாபி மன்பஈ ஆகியோரால் நடைபெற்றது.

மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற இரண்டாவது அமர்வில் மெளலவி.ஷாபி மன்பஈ அவர்கள் “இஸ்லாமிய இளைஞர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த தர்பியா நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை, கிள்ளை, பின்னத்தூர் மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதியிலிருந்து ஏரளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரங்கிப்பேட்டை கிளை சகோதரர்கள் சிறப்பான முறையில் செய்துயிருந்தனர்.

Friday, March 22, 2013

இளைஞர்க்கான தர்பியா-பரங்கிபேட்டை

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை


சிதம்பரம்;.22.03.13 அன்று அப்துல் ராஜாக் அவர்கள் மாவட்ட தலைவர் 'முஸ்லிம் முஸ்லிம்க்கு  செய்ய வேண்டிய கடமை ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?



மார்ச்,21: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.

முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.


தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.


இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )

பதிவு செய்த ஆண்டு : 2012
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : ARD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்.. 

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


Monday, March 18, 2013

அகங்காரமும் (ஈகோ )அதன் பின் விளைவுகளும் (வீடியோ )


அகங்காரமும் (ஈகோ )அதன் பின் விளைவுகளும்
உரை :சகோ பி .ஜெய்னுல் ஆபிதீன் 


வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.17.03.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் இமாம் சாபி அவர்கள் ;அனாசாரங்கள் என்ன' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.


மாணவர்களுக்கு தாவா

சிதம்பரம்; 12.03.13  அன்று நமது மர்கஸ்ஸில்  மாணவர்களுக்கு சகோ;யாசிர் (பெண்ணாடம் ) அவர்கள்  இஸ்லாம் தீவிரவாதம் ஆதரிக்கிறதா ?என்ற கேள்விக்கு பதில் அளித்து விளக்கம் அளித்தார்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உன்னிப்பாக கேட்டார்கள். ..அல்ஹம்துலில்லாஹ் 

மாற்று மத சகோதரருக்கு திரு குரான் அன்பளிப்பு


சிதம்பரம்;16.03.12 அன்று K.காத்தவராயன் அவர்கள் நமது மார்கஸ்க்கு வருகை தந்தார்கள் அவருக்கு கிளை நிர்வாகிகள் இஸ்லாம் பற்றி விளக்கி திருக்குரான் தமிழ் வழங்கப்பட்டதுஅவருக்கு நேர் வழி கிடைக்க து ஆ,செய்யுங்கள்.

கடலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) பொதுக்குழு


17.03.13 அன்று வடலூரில் நடைபெற்ற கடலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) பொதுக்குழுவில் கீழ்கண்ட புதிய நிர்வாகம் தேர்தெடுக்கப்பட்டது.

தலைவர் - அப்துர் ரஜ்ஜாக் (மேல்ப்பட்டாம்பாக்கம்)

செயலாளர் - அஷ்ரப் (கடலூர் ஒ.டி)

பொருளாளர் - சிராஜ் (சி.என்.பாளையம்)

மேலதிக விபரம் மற்றும் புகைப்படம் விரைவில்... இன்ஷாஅல்லாஹ்!

Friday, March 8, 2013

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை



சிதம்பரம்;.08.03.13 அன்று சகோ;முஹம்மது ஆதம் அவர்கள்'மறுமை வெற்றிக்கு' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, March 7, 2013

உலக அளவில் இரத்த தானத்தில் முத்திரை பதித்தவரும் டிஎன்டிஜே!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணிகளில் முக்கிய இடத்தை வகிப்பது இரத்ததான சேவையாகும். தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரத்ததானம் செய்வதில் டிஎன்டிஜே அனைத்து அமைப்புகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதே இதற்கு மிகப்பெரிய சான்றாகும். அல்ஹம்துலில்லாஹ்…

கடந்த 2012ஆம் ஆண்டில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டங்கள் மற்றும் கிளைகள் மூலம் 213இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 17,622 பேர் குருதிக்கொடை அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் டிஎன்டிஜே சார்பாக  173 முகாம்களில் 12,111 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டிலுள்ள டிஎன்டிஜே கிளைகள் மூலம் 31 முகாம்கள் நடத்தப்பட்டு 3,813 நபர்கள் குருதிக் கொடையளித்துள்ளனர்.
அவசர இரத்ததானமாக 1,698 நபர்களுக்கு குருதிக் கொடை வழங்கப்பட்டுள்ளது.
தனியொரு அமைப்பு இந்த அளவிற்கு கிட்டதட்ட பதினெட்டாயிரம் யூனிட்டுகளுக்கு நெருக்கமாக குருதிக் கொடை கொடுத்திருப்பது இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத புதிய சாதனையாகும்.
டிஎன்டிஜேவின் வருகைக்கு முன்பாக தமிழக அளவில் முதலிடம் பெரும் அமைப்புகள் ஐந்தாயிரம் யூனிட்டுகள் இரத்ததானம் செய்வதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட நிலையில் இருபதாயிரம் பேரை தொடக்கூடிய அளவிற்கு இரத்ததானத்தில் புதிய மைல்கல்லை டிஎன்டிஜே எட்டியுள்ளது.
முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் குண்டு வைக்கக்கூடியவர்கள்; தீவிரவாதிகள்; பிறரது இரத்தத்தைக் குடிக்கக்கூடியவர்கள் என்ற ஒரு கருத்தை தமிழகத்து ஊடகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் விதைத்திருந்தன. ஆனால் டிஎன்டிஜேவின் தன்னலம் பாராத இந்த மனித நேயச் சேவையின் மூலம் முஸ்லிம்கள்தான் இரத்ததானம் செய்வதில் முன்னணியில் உள்ளார்கள். அவர்கள்தான் தங்களது இரத்தத்தைக் கொடுத்து பிறரது உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பணியில் முதன்மையானவர்கள். அவர்களை முந்துவதற்கு பெரும்பான்மையான இந்து சமுதாய அமைப்புகளால் கூட இயலாது என்று அனைவரும் சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த மனிதநேயப்பணி சொல்ல வைத்துள்ளது.
முஸ்லிம்களில் சிறுபான்மையாக இருக்கக்கூடிய இந்த ஏகத்துவக் கொள்கைக் கூட்டம் மறுமை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால்தான் இத்தகைய பணிகளை தொடர்ச்சியாக செய்து வரமுடிகின்றது.
மேலும், சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் டிஎன்டிஜேவை அறியாத மருத்துவர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது. யாரேனும் வெளிமாநிலத்திலிருந்தோ, சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களுக்கு தொடர்பில்லாத ஊர்களிலிருந்தோ வந்து அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களேயானால் அவர்களிடத்தில் நீங்கள் டிஎன்டிஜேவை அணுகுங்கள்; எத்தனை யூனிட்டுகள் இரத்தம் உங்களுக்குத் தேவைப்பட்டாலும் அவர்கள் அதை வழங்குவார்கள் என்று அந்தந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களே அவர்களை நம்மிடம் அணுகச் சொல்லக்கூடிய அளவிற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் டிஎன்டிஜே தனி இடம்பிடித்துள்ளது.
இவ்வாறு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் வெளியூர் சகோதரர்கள் தங்களது அறுவைச் சிகிச்சைக்கான இரத்தத்தை வெளியில் காசு கொடுத்து வாங்கவும் வழியில்லாமல், தங்களுக்கு உதவ யாராவது முன்வரமாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஒரு பைசாகூட செலவுவைக்காமல் நமது சகோதரர்கள் அளிக்கும் குருதிக்கொடைக்கு அந்த சகோதரர்கள் அதற்கு பலனாக எவ்வளவோ கைமாறு செய்ய எத்தனித்தாலும் அவர்களிடத்தில் ஆட்டோவுக்கு கூட போக்குவரத்துப் பணம் வாங்காமல் திரும்பும் நமது சகோதரர்களைப் பார்த்து மருத்துவமனையிலுள்ளவர்களும், நோயாளியின் உறவினர்களும் பூரித்துப்போகின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல், நீங்கள் தரக்கூடிய இரத்தம்தான் தூய்மையானதாக உள்ளது என்றும், பீடி, சிகரட், மது போன்ற தீயபழக்க வழக்கங்கள் உங்களது உறுப்பினர்களிடம் இல்லாதது அதற்குரிய காரணம் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ளவர்கள் கூறுவது இந்த ஜமாஅத்தின் பணிகள் எந்த அளவிற்கு பிறமத சகோதரர்களை சென்றடைந்துள்ளது என்பதையும், இந்த ஜமாஅத்தைப் பற்றி பிறமத சகோதரர்கள் எந்த அளவிற்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இரத்ததானத்தில் முதலிடம் பிடித்த தென்சென்னை மாவட்டம் :
கடந்த 2012ஆம் ஆண்டு இரத்ததானத்தில் அதிகமான நபர்கள்  இரத்ததானம் செய்ததன் மூலம் முதலிடத்தை பிடித்த மாவட்டம் தென்சென்னை மாவட்டம் ஆகும். மொத்தம் 46 முகாம்களில் 3,834 நபர்கள் தென்சென்னை சார்பாக இரத்ததானம் செய்துள்ளார்கள்.
திருவள்ளூர் மற்றும் வடசென்னை ஆகிய மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. அரசு தரப்பிலிருந்து பல்வேறு விருதுகளும் டிஎன்டிஜேவின் இரத்த தான சேவையை பாராட்டி வழங்கப்பட்டுள்ளன.
சாதனை படைத்த தேனி மாவட்டம் :
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தேனி மாவட்டம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நமது தேனி மாவட்டத்தின் இந்த சேவையை அறிந்த அரசு மருத்துவமனை நிர்வாகம், அரசாங்க இரத்த வங்கியில் போதிய இரத்த இருப்பு இல்லாத நிலையில், டிஎன்டிஜேவின் தேனி மாவட்ட நிர்வாகத்தை அணுகி முகாம்களை நடத்தும்படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இரத்ததான முகாம்களை நமது சகோதரர்கள் நடத்தி தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியிலுள்ள இரத்த இருப்பு பற்றாக்குறையை நீக்கியுள்ளனர்.
பரவலாக அரசு மருத்துவமனைகளில் இரத்தம் கையிருப்பு இல்லாவிட்டால் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் டிஎன்டிஜேவின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு முகாம்களை நடத்தச் சொல்லி கோரிக்கை வைக்கின்றன. அவர்களது கோரிக்கைகளை ஏற்று நமது நிர்வாகிகள் இரத்ததான முகாம்களை நடத்தி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இரத்ததானத்தில் முதலிடம் வகிக்கும் ரியாத் மண்டலம்:
இந்தியாவிற்கு வெளியே உள்ள டிஎன்டிஜேவின் வெளிநாட்டு கிளைகளும் இரத்ததான முகாம்களை போட்டி போட்டு நடத்தி மனிதநேயப்பணியை உலகளாவிய அளவில் செவ்வனே செய்து வருகின்றன.
அந்த வகையில் வெளிநாடுகளில் இரத்ததானத்தில் முதலிடம் வகிப்பது ரியாத் மண்டலம் ஆகும். கடந்த 2012 ஆம் ஆண்டு ரியாத் மண்டலத்தின் சார்பாக 1,214 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். ரியாத்தைத் தொடர்ந்து தம்மாம் மற்றும் குவைத் ஆகிய மண்டலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.
சவூதி அரேபியாவில் நமது சகோதரர்கள் வழங்கும் இரத்தங்கள் சேகரிக்கப்பட்டு ஹஜ் செய்ய வரும் ஹாஜிகளுக்கும்,  ரமலான் மாதத்தில் உம்ரா செய்ய வருவோருக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.
இதுவல்லாமல் டிஎன்டிஜேவின் இந்த ஏகத்துவப்படை ஸ்ரீலங்கா, துபாய், அபுதாபி, பஹ்ரைன், ஷார்ஜா, புருனை, கத்தார் ஆகிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இரத்த தானம் செய்து உலகளாவிய அளவில் இரத்ததானத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.
அவசர இரத்த தான சேவையில் மதுரை முதலிடம் :
இரத்ததான முகாம்களில் இரத்தம் வழங்கி உயிர் காக்கும் பணி ஒரு வகை என்றால், திடீரென்று ஏற்பாடு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தேவைப்படும் இரத்தத்தை அதிரடியாக வழங்கி உயிர்காக்கும் பணி மற்றொரு வகை.
இந்த அவசர இரத்ததான சேவையில் மதுரை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகின்றது. சென்ற ஆண்டு 574 நபர்கள் அவசர இரத்த தானம் வழங்கியுள்ளார்கள். மதுரையைத் தொடர்ந்து திருச்சி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.
டிஎன்டிஜேவின் இந்த தன்னலமில்லாத இரத்ததானப்பணி இன்னும் சிறப்பாக அமைய வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
“ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’
அல்குர் ஆன் : 5 – 32
தாயகம் 2012
எண்மாவட்டம்முகாம்கள்நபர்கள்தர வரிசை
1தென்சென்னை4638341
2திருவள்ளூர்5435312
3வட சென்னை1917603
4தேனி57954
5இராமநாதபுரம்52215
6காஞ்சி கிழக்கு31836
7தஞ்சை தெற்கு51797
8விருதுநகர்21658
9காஞ்சி மேற்கு21309
10விழுப்புரம் மேற்கு412610
11நெல்லை29311
12நாகை தெற்கு18212
13திருவாரூர்27413
14புதுக்கோட்டை27314
15காரைக்கால்27015
16சிவகங்கை26916
17கோவை16717
18நாமக்கல்26518
19தி மலை16019
20வேலூர்15820
21ஈரோடு25621
22திருப்பூர்15522
23சேலம்15523
24தஞ்சை வடக்கு15224
25பெங்களுர்15025
26திருச்சி14326
27நாகை வடக்கு14227
28பெரம்பலூர்14228
29கரூர்13029
30நிலகிரி12630
31திருவாரூர்12531
 மொத்தம்17312,111 
வளைகுடா (2012)
எண்மண்டலம்முகாம்கள்நபர்கள்தர வரிசை
1ரியாத்612141
2தம்மாம்108682
3குவைத்34943
4துபாய்34564
5ஸ்ரீலங்கா22335
6அபுதாபி32336
7பஹ்ரைன்1977
8ஷார்ஜா1878
9புருனை1829
10கத்தார்14910
 மொத்தம்313,813 
அவசர தேவை

எண்மாவட்டம்நபர்கள்தர வரிசை
1மதுரை(அவசரதேவைக்கு)5741
2திருச்சி(அவசரதேவைக்கு)3422
3நெல்லை(அவசரதேவைக்கு)3083
4திருப்பூர்(அவசரதேவைக்கு)2624
5தென்சென்னை(அவசரதேவைக்கு)1115
6விருதுநகர்(அவசரதேவைக்கு)736
7வடசென்னை(அவசரதேவைக்கு)227
8ஈரோடு (அவசரதேவைக்கு)68
 மொத்தம்1,698

Friday, March 1, 2013

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை



சிதம்பரம்;.01.03.13 அன்று சகோ;யாசிர் (பெண்ணாடம் ) அவர்கள்'சோதனை வரும்போது' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

நேரடி ஒளிபரப்பு!




பிப்,28: இன்ஷாஅல்லாஹ் நாளை 01.03.2013 (வெள்ளிக்கிழமை) இந்திய நேரம் இரவு 8:30 மணிக்கு மாநில தலைவர் சகோ.பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ”இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்கள். இந்த உரை நமது ஆன்லைன் பிஜே (www.onlinepj.com) இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. காணத்தவாறதீர்கள்!