Sunday, January 1, 2012

சிதம்பரம் பகுதியில் மீட்பு பணியில் துணை ராணுவம்.



சிதம்பரம் தாலுகா பகுதிகளில் 50,000 வீடுகள் புயலால் சேதம்
சிதம்பரம் :கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புயல் பாதித்த பகுதிகளில் துணை ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தானே புயலால் மரங்கள் சாய்ந்ததால் சிதம்பரம் நகரில் இருந்து பஸ், ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எட்டு பேர் உயிரிழந்தனர். 42,000க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தது. 117 ஏக்கர் விவசாய பயிர்கள் சேதமடைந்தது. 400க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் துண்டிப்பு ஏற்பட்டு மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இரண்டாம் நாளாக இதே நிலை நீடித்தது. நகர பகுதிகளில் மின்சாரம் ஒரே நாளில் கொடுக்கப்பட்டுவிடும் என்ற நிலையில் கிராம பகுதிகளில் ஒருவாரம் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் சிதம்பரம் பகுதிகளில் மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழு ( துணை ராணுவம்) அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
உதவி கமாண்டர்கள் சர்ச்சிங், மோகனன் ஆகியோர் தலைமையில் இரு குழுவாக 62 பேர் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் சாலையில் மரங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:

Post a Comment