Friday, June 29, 2012

கொள்ளு மேட்டுத் தெருவில் பெண்கள் பயான்

சிதம்பரம்; 29.06.12 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாககொள்ளு மேட்டுத் தெருவில் உள்ள வீட்டில்பெண்கள் பயான் நடைபெற்றது அதில்'நபி வழியே நம் வழி'என்ற தலைப்பில் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பெண்கள் பயன் அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, June 28, 2012

சிதம்பரம் பகுதிகளில் வாராந்திர பயான்கள்


ஆண்கள் பயான்

சிதம்பரம்;26.06.12 சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'இன்றைய இளைஞர்களின் தக்வா'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்ஆண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்
சிதம்பரம்;25.06.12 திங்கள்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'நோன்பின் மாண்புகள் ;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் (tntjபள்ளி)அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

சிதம்பரம் வாராந்திர பயான்

சிதம்பரம்;.24.06.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'என்னை சார்ந்தவன் இல்லை என்று நபி(ஸல்)யாரை கூறினார்கள்?'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்

சிதம்பரம்;23.06.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில்சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'பெற்றோர் நலம் பேணுவோம்'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான .பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, June 24, 2012

கிள்ளையில் இஸ்லாத்தை ஏற்ற இரு தம்பதிகள்!



கிள்ளை ஜுன்24: கடலூர் மாவட்டம் (பரங்கிப்பேட்டை அருகே) கிள்ளையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏகத்துவ மற்றும் அழைப்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நமது அழைப்பு பணிக்கு அல்லாஹ் கொடுத்த பரிசாக இரண்டு தம்பதிகள் தங்களின் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

22.06.2012 அன்று ஜும்மா தொழுகைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிள்ளை மர்கஸிர்க்கு வருகை தந்த இரண்டு தம்பதியினரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவர் அணி ஒருங்கினைபாளர் சகோ.கலீல்லூர் ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் ஏகத்துவத்தின் தாரக மந்திரத்தை கூறி இஸ்லாத்தை ஏற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

பிரபாகரன்‍ - இரமா தம்பதியினர் முஹமது ரஃபீக் மற்றும் அப்சாரா பானு என்று தங்களுக்கு பெயர் சூட்டிக் கொண்டனர். தங்களின் புதல்வனுக்குமுஹ்ம்மத் என்று நமது ஈருளக தலைவரின் பெயரை சூட்டி மகிழ்ந்தனர்.


மற்றும் ஒரு தம்பதியினர் தங்களது பெயரினை முஜமில் மற்றும் ஷாஹின் பானு என்று சூட்டிக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இவர்களது மறுமை வாழ்விற்க்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

Friday, June 22, 2012

லெப்பைக்குடிக்காடு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - www.onlinepj.com ல் (LIVE) நேரடி ஒளிபரப்பு




22/06/2012  வெள்ளிக்கிழமை 

லெப்பைக்குடிக்காடு  சந்தைதிடலில்நடைபெறும் 

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 

இன்ஷா அல்லாஹ் மாலை 7 மணியளவிலிருந்து 

www.onlinepj.com ல் (LIVE) நேரடி ஒளிபரப்பாக இருக்கிறது.

உங்களின் சந்தேகங்களுக்கு விடையளிப்பவர்

சகோ: பீ.ஜைனுல் ஆபிதீன்


தனிநபர் தஃவா

சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக
18.06.12 அன்று பல இடங்களில்தனிநபர் தஃவா
+2 படிக்கும் மாணவர்கள் நடிகர்களை பின் பற்றி கையிலும் ,கழுத்திலும் கட்டி இருந்த செயின்,மற்றும் கயிறுகளை நமது பள்ளி இமாம்தஃவாசெய்து, அறுத்தெறிந்த போது....


இஸ்லாம் காட்டிய ஒற்றுமை பற்றி நமது பள்ளி இமாம் தஃவாசெய்த போது.... 


ஒழுக்க வாழ்வை பேணுதல் பற்று நமது பள்ளி இமாம் தஃவாசெய்த போது. 

Thursday, June 21, 2012

சிதம்பரம் பகுதிகளில் வாராந்திர பயான்கள்

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்
சிதம்பரம்;18.06.12 பின்னத்தூரில் மதியம் 2.30 மணிக்கு ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில்'மிஹ்ராஜ் என்றால் என்ன?என்ற தலைப்பில்மவ்லவி ஹனீப்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


சிதம்பரம் வாராந்திர பயான்


சிதம்பரம்;.17.06.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'மிஹ்ராஜ் என்பது அல்லாஹ்வின் அத்தாட்சிகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்

சிதம்பரம்;16.06.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில்
தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில்சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் மார்க்கம் ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் கொள்ளுமேட்டு தெரு பெண்கள் பயான்:


சிதம்பரம்;14.06.12வியாழன் அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாககொள்ளுமேட்டுதெருவில்,ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்' உளத் தூய்மை ' என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார். பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Friday, June 15, 2012

தீ விபத்திற்குள்ளான குடும்பகளுக்கு ரூபாய் 18 ஆயிரம் உதவி

















சிதம்பரம்; பூதகேணி புதுத் தெருவில் புதன் மாலை (13/06/2012) அன்று 7 கூரை வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது, இந்த கோர விபத்தில் அந்த வீட்டின் அணைத்து பொருள்களும் (பீரோ, பிரிஜ் மற்றும் ஆடைகள் எரிந்து சாம்பலனதோடு, பள்ளி மாணவர்களின் அனைத்து புத்தகங்களும் கூட எரிந்து விட்டது.
இந்த துயர சம்பவத்தை உடனடியாக பார்வையிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் ஜாதி மதம் பாராமல் குடும்பத்திற்கு 2000/வீதம் மொத்தம் 18000/ம் 7கூரை வீடுகள்(9.குடும்பகள்) மாவட்ட பொருளாளர் AK தாஜ்தீன்,கிளை நிவாகிகள் ஆதம்,இப்ராகிம்,ஹனீப் வழங்கினார்கள்.
சோதனையான நேரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் சிற்றுரை வழங்கினார்கள்.
குறிப்பு' அரசாங்கம்,அரசியல்வாதிகளுக்கு வருவதற்கு முன்பாகவே வந்து ஆறுதல் கூறி உதவிதொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, June 14, 2012

ஜே அரசின் பச்சைத் துரோகத்துக்கு எதிராக போராட்டம்! (Live)


சென்னை,ஜுன்,13:மார்ச் மாதம் 1346 பயிற்சி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1346 பேரில் ஒரே ஒரு முஸ்லிமுக்குக் கூட வேலை அளிக்கப்படவில்லை.

3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்குக் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் இதற்கு நிகரான பச்சைத் துரோகம் வேறு இருக்க முடியாது. 

இந்த அநியாயத்தைக் கண்டித்து மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் நடத்துகிறது. 14 ஆம் தேதி வியாழன் காலை 11.00 மணிக்கு நடக்கும் சிறை செல்லும் இப்போராட்டம் இன்ஷாஅல்லாஹ் நேரடியாக www.onlinepj.com இணையதளத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படும்...போராட்டத்தில் கலந்துகொள்ளும் என் கொள்கை சொந்த(சி)ங்களுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்!

போராட்டம் வெற்றி பெற்று நமது சமுதாயத்குரிய இட ஒதுக்கீடு கிடைக்க வல்ல ரஹ்மானிடம் அனைவரும் துஆ செய்வோம்!

சிதம்பரம் பகுதிகளில் வாராந்திர பயான்கள்


சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்

சிதம்பரம்;11.06.12 பின்னத்தூரில் மதியம் 2.30 மணிக்கு ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில்'சைத்தானை விட்டு விலக என்ன வழி?என்ற தலைப்பில்மவ்லவி ஹனீப்அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் வாராந்திர பயான்


சிதம்பரம்;.10.06.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'இணை வைத்தல் ஓர் அபாயம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.


சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்


சிதம்பரம்;09.06.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில்
தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில்சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'பேய் பிசாசு உண்டா? ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, June 7, 2012

சிதம்பரம் வாராந்திர பயான்



சிதம்பரம்;03.06.12 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்சிதம்பரம் கிளைசார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'அல்லாஹ்வை நம்புகிற விதத்தில் நம்புவோம் ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, June 5, 2012

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.



1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.
I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :
1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.
2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.
3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது
4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.
5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன
6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.
II. பட்டய படிப்பு (டிப்ளோமா):
இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc… போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன. டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ). 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.
III. சான்றிதழ் படிப்பு (ITI):
இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.
10 – ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு : (கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)
1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc…
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.
S.சித்தீக்.M.Tech
நன்றி ;tntjnet

சிறுபான்மையின மாணவர்களுக்குகல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு!


கடலூர்:சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரித்த கல்வி நிலையங் களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 2012-13ம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இக்கல்வி உதவித் தொகை பெற பெற்றோர்களுக்கு ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சமாக இருவருக்கு மட்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மாணவ, மாணவிகள் உதவித் தொகை விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாளாகும். 

கல்வி நிலையங்கள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்புப் பட்டியலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் உரிய படிவத்துடன் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.