Monday, April 30, 2012

சிதம்பரம் கிளை சார்பாக பூத கேணி பெண்கள் பயான்


சிதம்பரம்;24.04.12 செவ்வாய்கிழமையன்றுமதியம் 2.30 மணியளவில்   சிதம்பரம் கிளை சார்பாக பூத கேணிபகுதியில்ஒரு சகோதரர் வீட்டில் கிளைசெயாளார் இப்ராஹீம் முன்னிலையில்'பெற்றோருக்கு பணிவிடை'பற்றி நமது பள்ளிஇமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, April 26, 2012

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு...!


இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.  1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தபிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்
1) ஷேக்,
2) சையது,
3) தக்னி முஸ்லிம்
4) அன்சார்,
5) தூதுகோலா
6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
7) மாப்பிள்ளா
என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 7 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.
இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும்.
பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் சாதி என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர்.
பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டு போய்விடுகிறது.
எனவே மதம் என்று குறிப்பிடப்படும் இடங்களில் “இஸ்லாம்” என்றும் சாதி என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 7 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும்.
வேறு எந்த பெயரையும் குறிப்பிடக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் போதும் இதே வழிமுறையைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சாதிவாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த அளவுக்கு உண்மையிலேயே வருமானம் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவர் கவுரவத்திற்காக மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தால் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாயாகி, இவர் ஏழை அல்ல என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, இவருடைய பிள்ளைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும்.
சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தின் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் கூட 25 சதவீது இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் குடும்பம் வருமானத்தை அதிகப்படுத்தி காண்பித்தால் இந்த இடஒதுக்கீடும் கிடைக்காமல் போய்விடும். இப்படி முஸ்லிம்கள் சாதாரணமாக சொல்லும் சிறிய பொய் கூட எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு பொருளாதார நிலவரங்களை கேட்கும் போது பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரசின் கல்வி உதவித் தொகை பாதிக்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. அதனால் சாதி இல்லை என்று தான் நாங்கள் விபரம் தருவோம் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள். சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடும். அதில் ஒன்றுதான் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதிரிதீயில் தரப்படுகிறதே தவிர மத ரீதியில் தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது சாதி இல்லை என்று முஸ்லிம்கள் குறிப்பிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போய், அவர் தம் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பில் அறவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.
அரசியல் சட்டம் வகுக்கப்படும் போது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதுபோல் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவும் வழி வகை செய்யப்பட்டது. 
அதோடு சேர்த்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது. எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதில் நம் முன்னோர்கள் கோட்டைவிட்டு விட்டனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் தான் இருக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் உரத்து முழக்கமிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் கூட முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு சரிப்படாது. மதரீதியான இட ஒதுக்கீடுதான் சாத்தியப்படும் என்று கொள்கை முழக்கம் செய்யத் தவறிவிட்டார்.
அதனால் இந்துக்களை சாதிரீதியாக பிரித்தது போல் முஸ்லிம்களையும் சாதி ரீதியாக பிரித்து இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இதைமாற்ற வேண்டுமெனில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் முஸ்லிம்கள் “சாதி இல்லை” என்று சொல்ல வேண்டும்.
அதற்கான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்று வெல்ல வேண்டும். அந்த கோரிக்கையில் வென்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே “சாதி இல்லை” என்று ஒரு முஸ்லிம் குறிப்பிட்டால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடுகளையும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை, வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பறி கொடுக்க நேரிடும்.
இதை கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் சரிவர நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
SOURCE: www.tntj.net

Tuesday, April 24, 2012

கிள்ளை கிளை சார்பாக கிறிஸ்துவ சகோதரர்களிடம் தஃவா



சிதம்பரம்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிள்ளை கிளை சார்பாக 19.04.12 அன்று பாதிரியார் மற்றும் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ,கிறிஸ்துவர்களிடம் நடந்தத விவாதம் DVD வழங்கி இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.

சிதம்பரம் வாராந்திர பயான்

சிதம்பரம்; 22.04.12 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் நகர தலைவர் ஷேக் முஹம்மதுஅவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பிலும்
சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'உம்முல் முக்மினீன் உம்மு ஹபீபா' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் 
அதிகமானபெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்

சிதம்பரம்;21.04.12 சனிக்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'ஒருவரை ஒருவர் நேசிப்போம்;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில்பெண்களும்,மற்றும்ஆண்களும்கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Monday, April 23, 2012

சிதம்பரம் தைக்கா மேடு பெண்கள் பயான்



சிதம்பரம்; 21.04.12 சனிக்கிழமையன்றுஇரவு 7.30 மணியளவில்  தைக்கா மேடு என்ற பகுதியில்ஒரு சகோதரர் வீட்டில் கிளைசெயாளார் இப்ராஹீம் முன்னிலையில்'ஜனாஸாவை குளிப்பாட்டும் முறை'பற்றி நமது பள்ளிஇமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் கலந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 22, 2012

தனிநபர் தஃவா



சிதம்பரம்; 20.4.12 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  TNTJ பற்றி தவறாக புரிந்துகொண்டமுஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் TNTJஎன்றால்என்ன? TNTJ வின் பணிகள் பற்றி விளக்கியவுடன்,அவர் உண்மை நிலையை அறிந்து கொண்டார்.எல்லாம் வல்ல அல்லாஹ்வுகே எல்லா புகழும்.       

தனிநபர் தஃவா


சிதம்பரம்; 20.4.12 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முஸ்லிம் சகோதரர் வீட்டு வாசலில் படிகார கற்களை தொங்க விட்டிருந்தார் இவைகளுடைய தீமைகளை, மாற்று மதக் கலாச்சார கொள்கை இஸ்லாமியர்களாகிய நம்மிடம் அறவே வரக்கூடாது என்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் விலக்கி அந்த படிகார கற்களைஅகற்றினர்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான்



சிதம்பரம்; 19.4.12 அன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கொள்ளுமேட்டுத் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'ஸலாம் சொல்லி பகையை வெல்லுங்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் பெண்களும் ஆண்களும கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

அழைப்பு பனி


தாவத்தில் தஃவா



சிதம்பரம்; 19.4.12 அன்று மாலை சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நகரச் செயலாளர் இப்ராஹிம் முன்னிலையில் உறவுகள் மேம்படுத்துவதற்காக விருந்து ஏற்பாடும்,'உறவுகளை பேணுதல்' என்ற தலைப்பில் சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் உரைநிகழ்த்தின்னார்கள் இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்

உதவி

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரியவருக்கு உதவி


சிதம்பரம்; 19.4.12 அன்று காலை சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரியோர் ஒருவருக்கு உடுத்துவதற்கு உடையும் செலவுக்கு பணமும் நகரப் பொருளாளர் M.ஹனீப் அவர்கள் முன்னிலையில் இமாம் ஹனீப் அவர்கள் வழங்கினார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும்.

Saturday, April 21, 2012

109 வயதிலும் உழைக்கும் முஸ்லிம் முதியவர்!




கீழக்கரை, ஏப்ரல் 21: கீழக்கரையைச் சேர்ந்த 109 வயது செய்யது அபுதாகிருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது வழங்க வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர் (109). கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து வருகிறார். வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார். மீன்களை சுத்தப்படுத்தும் தொழிலில் வாடிக்கையாளர்கள் கொடுக்கின்ற கூலியைப் பெற்றுக்கொள்ளு்ம் இவர் பேரம் பேசுவதில்லை.



இது போன்ற கடினமான வேலையில் ஈடுபடும்போது சிறிது கவனம் சிதறினாலும் கைகளில் ரத்தகாயம் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்த முதிய வயதிலு்ம் இவர் இவ்வளவு துல்லியமாக வெட்டுவதற்கு காரணம் செய்யும் தொழிலி்ல் இருக்கும் ஈடுபாடுதான்.


இது குறித்து சிறு தொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் செயலாள‌ர் நல்ல இப்ராகிம் ஆகியோர் கூறுகையில்:


ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பான செயல்களுக்காக‌ பல்வேறு விருதுகளை அறிவித்து பலரையும் கெளரவப்படுத்துகிறது. அந்த வகையில் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் 100 ஆண்டுகளைக் கடந்த மூத்த குடிமகனான அபுதாகிர் அவர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்றனர்.

ஏற்கனவே இவருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய இளைஞர்களே உழைக்க சோம்பேறிப்படும் இந்த காலத்தில், இந்த வயத்தில் உழைத்து சாப்பிடும் ”செய்யது அபுதாஹிர் அப்பா” ( அப்பா என்பது பரங்கிப்பேட்டை பாஷை - தாத்தா என்று அர்த்தம்) பாரட்டுகுரியவரே!


அல்லாஹ் அவர்களுக்கு இன்னும் உடல் தாக்கதை அதிகரிக்க செய்வனாக... 


இஸ்லாமும் உழைத்து உண்பதை எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதை கீழ்கானும் ஹதீஸ் நமக்கு தெரிவிக்கின்றது...2072.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்."  - என மிக்தாம்(ரலி) அறிவித்தார். 
Bukari Volume :2 Book : 34

Thursday, April 19, 2012

கொடிய நரகிலிருந்து குழந்தைகளைக் காப்போம்!


கொளுத்தும் வெயிலுடன் கோடைகாலம் துவங்கி விட்டது. இதை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, பின்னர் ஓரிரு மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும்.

விடுமுறை அளிக்கப்பட்ட மாத்திரத்தில் மாணவர்கள் கிரிக்கெட் மட்டையும் பந்துமாகத் தான் அலைவார்கள்.  உச்சி மண்டையைப் பிளக்கின்ற உச்சி வெயிலின் கோரப் பிடியிலிருந்தும் கொடூர வெப்பத்திலிருந்தும் தப்பிப்பதற்காகத் தான் கோடை விடுமுறை!


கோடை விடுமுறையின் இந்த நோக்கத்தையே இவர்களின் வெயில் விளையாட்டு தகர்த்தெறிந்து விடுகின்றது; தவிடுபொடியாக்கி விடுகின்றது.
இதற்கு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலேயே இருந்து விடலாம். அதன் காரணமாகக் கோடை வெயிலின் கொடூரத்தை விட்டும் அவர்கள் தப்பலாம்.
கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றிகண்ட கண்ட நபர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவது,பெண்களைக் கேலி செய்வதுசினிமா பார்ப்பதுஅரட்டை அடிப்பதுஊதாரித்தனமாகச் செலவு செய்வது போன்ற வீணானபாவமான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.
புகை பிடிப்பதிலிருந்து போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்ற பாவச் செயல்களிலும் பலியாகி விடுகின்றனர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாணவமாணவியரை நல்வழிப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாககோடை காலப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது.
அந்தந்த மாவட்டப் பகுதிகளில் நடத்தப்படுகின்ற இந்த முகாம்களில் தங்கள் குழந்தைகளை அனுப்பி அவர்களது கோடை கால விடுமுறையை மார்க்கக் கல்விஒழுக்க வாழ்க்கை போன்றவற்றைப் பெறுகின்ற வாய்ப்பாக ஆக்கிக் கொள்ளுமாறு மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்று கல்வி என்பது உலகக் கல்விமார்க்கக் கல்வி என இரு கூறாகப் பிரிக்கப்பட்டு விட்டது. உலகக் கல்வி ஒரு குழந்தையின் நாள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது. மார்க்கக் கல்வியைப் பொறுத்த வரை காலையில் ஒரு மணி நேரம் அல்லது மாலையில் ஒரு மணி நேரம் என்ற ஓரக் கல்வியாக ஆகி விட்டது. பலருக்கு அதற்குக் கூட நேரமில்லை.
மக்தப் மதரஸாக்களில் இந்த ஓர நேரங்களில் ஓத வருகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இருநூறு அல்லது முன்னூறு இருக்கும். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரேயொரு ஆசிரியர் தான் இருப்பார். அலிப் சபர் ஆபே சபர் பா என்று கூட்டாக ராகம் போட்டு ஒரு பாட்டு பாடி விட்டுக் கலைந்து விடுகின்றனர்.
இந்தக் கூட்டுக் கல்வியில் குழந்தைகள் என்ன கற்று விடப் போகின்றார்கள்சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமில்லை. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்கின்ற வகையில் தான் கோடைகாலப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.
குறைந்த நாட்களில் இஸ்லாமியக் கொள்கை விளக்கம்தொழுகைப் பயிற்சிதொழுகையில் ஓத வேண்டிய துஆக்கள்அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்மனனம் செய்தல் போன்ற ஒரு குறைந்தபட்ச பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்ற இந்தக் கோடைகாலப் பயிற்சி முகாமுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பி மார்க்கக் கல்வி பயிலச் செய்யுங்கள். கொடிய நரகத்திலிருந்து அந்தக் குழந்தைகளைக் காத்துக் கொள்ளுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும்கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.  [அல்குர்ஆன் 66:6]


நன்றி: ஏகத்துவம்

மாணவர்கள் தங்களது கோடைகால விடுமுறையை பயனுள்ள வழியில் செலவிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை   ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.
இந்த ஆண்டு (2012) TNTJ நடத்தும் கோடைகால பயிற்சி முகாம்களின் இடங்கள் மற்றும் தொடர்பு எண்கள்!


source: www.tntj.net

தனி நபர் தஃவா


சிதம்பரம்;18.04.012 அன்று இரவு 09.30 மணிக்கு கிளை செயலாளர் இப்ராஹீம் முன்னிலையில்
''நன்றி செலுத்துவோம் அல்லாஹ்வுக்கு'என்று தனி நபர் தஃவா நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்களால் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா.

தனி நபர் தஃவா

சிதம்பரம்;18.04.12 அன்று நமது பள்ளிக்கு ஓத வந்த குழந்தைகள்அணிந்திருந்த தாயத்தை தாவா செய்து பெற்றோர் சம்மதத்துடன் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் அவிழ்க்கும் காட்சி...அல்ஹம்துலில்லாஹ் 

நான் முஸ்லிம் தஃவா

சிதம்பரம்; 18.04.012 அன்று இரவு 08.30 மணிக்கு கிளை செயலாளர் இப்ராஹீம் முன்னிலையில் சதிஸ் ,மணி ,ஆகியோருக்கு
  'ஒரே கடவுள்' என்ற கொள்கையை நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் விளக்கினார்கள்.அவர்களுக்கு இறைவன் நேர் வழி காட்டுவானாக.

சிதம்பரம் பள்ளிப்படையில் பெண்கள் பயான்;


சிதம்பரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதிகமான இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக,

சிதம்பரம்; 17.04.12 மதியம் 03.00 மணியளவில் அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பள்ளிப்படையில், பெண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'இஸ்லாம் என்றால் என்ன?'என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்.

Tuesday, April 17, 2012

சிதம்பரம் ராகேவேந்திர கல்லூரி அருகே விபத்து 2 பேர் பலி!


கீழமுங்கிலடி, ஏப்ரல் 17:  சென்னை விமானம் நிலையத்தில் உறவினரை வெளிநாட்டு செல்ல  வழியனுப்பிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த நாகை மாவட்டம் பூங்கானுரை சேர்ந்த சர்புன்னிசா (60), ஜபரூத்தின் (40) மற்றும் டிரைவர் கார்த்தி ஆகியோர் காரில் பூங்கானுர் நோக்கி சென்று கொண்டிருந்த போது காலை 7.30 மணியளவில் சிதம்பரம்  கீழமுங்கிலடி ராகேவேந்திர கல்லூரி அருகே எதிர வந்த டிப்பர் லாரியுடன்  நேருக்கு நேர் மோதியத்தில் காரில் இருந்த  சார்புன்னிசா (60) மற்றும் ஜபரூத்தின் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் டிரைவர் கார்த்தி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தில் பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரின் உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் திரண்டுயுள்ளனர். மேலும் செய்தியரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை நேரில் சென்று அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி மற்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இன்னா இலைஹி வயின்னா இலைஹி ராஜிஊன்...