சிதம்பரத்தில் இருந்து 19 வாகனம் அணிவகுத்து சென்ற காட்சி
ஆயிரம்காணக்கான மக்கள் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களான பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, காட்டுமன்னார்குடி, சிதம்பரம், கிள்ளை, ஆயங்குடி, நெல்லிக்குப்பம், கடலூர் முதுநகர், கடலூர், விருத்தாசலம், மங்களம்பேட்டை, பெண்ணாடம், பண்ருட்டி, மேல்பாட்டாம்பாக்கம் ஆகிய ஊர்கலிருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்றப்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் மூலம் தங்கள் கோரிக்கை அரசுக்கு வைத்தனர்.
மாநில செயலாளர் சகோ.தவ்பீக் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரிக்கவே கடலூர் உழவர் சந்தை அருகே இருந்த சாலையை காவல்துறையினர் தடை செய்தனர்.
மேலும் போராட்டதின் சிறப்பு அம்மசமாக பரங்கிப்பேட்டை கிளை மூலம் இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை வெளிப்படுத்தும் வகையில் தனி வாகனத்தில் இறைச்சி கடை வைத்திருப்பவர் போல், அயனிங் கடை வைத்திருப்பர் போலும் செய்யபட்டுயிருந்தது போராட்டதில் வந்திருந்தவர்களையும் மற்றும் பொதுவான மக்களையும் கவர்ந்தது.
அதேபோல் இந்நிலை வேண்டும் என்ற டாக்டர் போல் வேடம் அனிந்தும், நீதிபதி, கலெக்டர், போலீஸ் ஆகிய பாதகைளை கையில் வைத்து நாங்களும் இதுபோல் ஆகவேண்டும் என்று நம் சமுதாய மாணவர்கள் போராட்டதின் கோரிக்கையை இதன் மூலம் வெளிப்படுதினார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! எங்கள் இறைவா! இந்த மக்கள் வெள்ளத்தின் மூலமகவாது கல்மனம் கொண்ட இந்தியா ஆட்சியாளர்களின் உள்ளத்தை கரைய வைத்து வறுமையால் பீடிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு வழங்க உன்னையே வேண்டுகிறோம். எங்கள் போராட்டத்திற்கு இட ஒதிக்கீடு பெறுவதன் மூலம் வெற்றியை தருவாயாக!
No comments:
Post a Comment