லால்பேட்டை;அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 29.05.2012 அன்று பல்வேறு தடைகளை தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை சார்பாக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் (மாநாட்டில்) ஆயிரக்காணக்னேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் அருகே உள்ள காலடிபேட்டை கிளையில் இனையதளத்தின் நேரடி ஒளிப்பரப்பை மர்கசில் பார்க்க ஏற்பாடு செய்துயிருந்தணர். மேலும் புதுகோட்டை, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை போன்ற பல மாவட்டங்களில் பல கிளைகளில் இது போன்ற நேரடி ஒளிபரப்பினால் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடை செய்திட வேண்டும் என சுன்னத் ஜமாஅத் உள்பட பல்வேறு அமைப்பினர் சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை தகர்க்கும் வண்ணம் ஆயிரக்காணக்னேர் கலந்து கொண்டனர். அல்லாஹ் அக்பர்.
பாதுகாப்பிற்க்காக ஏரளாமான போலீசார் குவிக்கப்பட்டுயிருந்தணர். எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் அல்லாஹ்வின் அருளாளல் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!