Wednesday, January 18, 2012

இரண்டாம் கட்டமாக இருநூறு குடும்பங்களுக்கு: TNTJ தானே புயல் நிவாரணம்!

பரங்கிப்பேட்டை: அல்லாஹ்வின் கிருபையால் தானே புயலால் பாதிக்கப்பட்ட பரங்கிப்பேட்டை மக்களுக்கு இரண்டாம் கட்டமாக தானே புயல் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் சகோ.முத்துராஜா அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் சகோ.சாதிக் தனிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக், நகர பொருளாளர் சகோ.ஃபாஜல் உசேன் அவர்களின் முன்னிலையில் "மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி" வளாகத்தில் 4.30 மணியளவில்இருநூறு குடும்பங்களுக்கு தலா ரூபாய்.2,000/- வீதம் மொத்தம் ரூபாய்.4 இலட்சம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் "மாநில தலைமை" மூலம் வழங்கப்பட்டது. 
இதில் நகர செயலாளர் முஹம்மது இக்பால், நிர்வாகிகள் அமானுதீன், ஷாஹீல் (அப்துல்) ஹமீது, ஹாஜப்பா, ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
இதுபோக புயலுக்கு அடுத்த நாள் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு உணவுபொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! 
இந்த புயல் நிவாரண நிதியை பாதிக்கப்பட்ட மாற்று மத சகோதர சகோதரிகளும் பெற்று சென்றனர். அதேபோல் TNTJ வை தீவிரமாக எதிர்க்கும் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்களும் பெற்று சென்றனர். பாதிக்கப்பட்டவரா என்று மட்டும் தான் நாம் பார்த்தது. பாதிக்கப்பட்டவர் எந்த மதத்தை சேர்ந்தவர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்று நாம் பார்க்கவில்லை.  
பாதிக்கப்பட்ட மாற்று மத சகோதரி ஒருவர் செய்தி சேனலுக்கு பேட்டி அளிக்கும்போது: "மற்ற ஊர்களில் இந்து முஸ்லிம் வேறுபாடு இருக்கலாம் ஆனால் பரங்கிபேட்டையில் இந்து முஸ்லிம் சகோதர சகோதரிகளாகத்தான் வாழ்கின்றோம்.  அதுக்கு ஒரு பெரிய எடுத்துகாட்டு TNTJ வழங்கும் இந்த நிவாரண உதவி" என்று சொன்ன போது அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து விட்டனர். எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!



இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பத்திரிகை நிருபர்கள் , காவல் துறையினர் அனைவருமே மதம் பார்க்காமல் TNTJ செய்த இந்த உதவியை பெரிதும் பாராட்டினர். (புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே) 
தானே புயல் நிவாரணமாக கடலூர் மாவட்டத்தில் இதுவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக ரூபாய் 40 லட்சம்  வழங்கப்பட்டது.  எல்லாஹ் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
பெரிய கட்சிகளே நிவாரணம் தொகை அளிக்க முன்வராத போதும்,  நிவாரணம் வழங்கிய அரசுதுறைய பல குறுபடிகள் இருக்கும் நிலையில் ஒரு "இஸ்லாமிய அமைப்பு"  சாதி மதம் பாரமால் முன்பே முறையான கணகெடுப்பு எடுத்து, டோக்கன் வழங்கி ஒவ்வொருரிடம் குடும்ப அட்டைகள் பெற்று கொண்டு எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் வழங்கியது அரசுத்துறையே வியக்க செய்தது என்றால் அது மிகையாகது. அல்லாஹ் அக்பர்!
இதை எல்லாம் நாம் ஏன்? செய்கின்றோம் என்றால் நமது இஸ்லாமிய மார்க்கம் நமக்கு இவ்வாறு போதிகின்றது.

"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல் குர்ஆன் 5:32)
நன்றி;tntjpno

No comments:

Post a Comment