இரவு பகலாக ஒருகணம் கூட தவறாது மனிதர்களால் சுற்றி வரப்படும் வழிப்பாட்டுத்தளம் உலகில் கஃபா மட்டுமே!
கடும் வெயிலானாலும் கொட்டும் மழையானாலும் கடும் குளிரானாலும் சரி வருடம் முழுவதும் இப்புனித இறையில்லத்தை சுற்றிச் சுற்றி மனிதர்கள் வளம் வரும் காட்சி காணகண்கொள்ளா காட்சியாகும்
தவாஃப் இடது புறமாக சுற்றுவது ஏன் என்பது தான் கேள்வி உலகிற்கோர் அருட்கொடையாக மட்டுமின்றி அனைத்து மனித குலத்திற்கும் ஓர் அழகிய வழிகாட்டியாக தென் கிழக்கு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜ்ருல் அஸ்வத் என்கின்ற புனித கல்லை அடையாளமாக வைத்து தவாஃப் தொடங்கி ஏழு முறை கஃபாவை சுற்றிவர வேண்டும் .
தொடங்கிய அதே இடத்தில் ஏழாவது சுற்றை முடிப்பதே தவாஃப் ஆகும் இதை Anti Clockwise என்று சொல்லப்படும் அதாவது கடிகார முள் சுற்றும் திசைக்கு எதிராக சுற்றுவது . பூமி சுற்றும் அதே திசையில் நாமும் கஃபாவை சுற்றி வலம் வருவது இஸ்லாத்தில் ஒவ்வெறு செயலுக்கும் ஆழ்ந்த பொருள் புதைந்து இருப்பதை நாம் அறியலாம் ,
உடலின் இடது புறத்தில் இதயம் அமைந்துள்ளது உடலின் மையத்திற்கு எதிர் திசையில் செயல்படும் விசை ஆற்றல் நாம் இடது புறமாக ஓடும்பொழுது இவ்வாற்றல் வலது புறத்தில் இருந்து இடது புறமாக செயல் படும் .நமது உடலில் பாய்ந்தோடும் இரத்தம் இரண்டு வகைப்படும் ஒன்று சுத்தமான இரத்தம் இரண்டு அசுத்தமான இரத்தம் என இருவகைப்படும். இதய இயக்கம் அசுத்தமான இரத்தத்தை சுத்த இரத்த தமனிகள் மூலம் உடல் எங்கும் பாய்ச்சப்படுகின்றது .இவ்வாறுதான் மனிதன் உயிர் வாழும் வரை இச்சுழற்சிமுறை நடை பெற்றுக்கொண்டே இருக்கும் அசுத்த இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் இரண்டு முக்கிய தமனிகள் உள்ளது
1 மேல் புற தமணி
2 கீழ் புற தமணி
மேல் புற தமணி தலை நெஞ்சு உடலின் மேற் பகுதிகளில் பாயும் அசுத்த இரத்தத்தையிம் கீழ் புற தமணி மற்ற பாகங்களில் பாயும் அசுத்த இரத்தத்தை இதயத்திற்கு செலுத்துகின்றன (பம்பிங்) இதயத்தில் அசுத்த இரத்தம் உறிஞ்சிக்கொள்ளும் (Sucking Action) என்று சொல்லப்படும் இதயத்தின் உறிஞ்சும் சக்தியின் உதவியுடன் மேற் புற தமணி அசுத்த இரத்தத்தை இடது புறத்தில் இருந்து எடுத்து விடுகின்றது
உடலின் மையம் எதிர் திசை வினையாற்றல் இதயத்தின் உறிஞ்சும் தன்மைக்கு உறுதி செய்கின்றது .
இதன் காரணமாக இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது நாம் உம்ரா மற்றும் ஹஜ் செய்யும் போது எளிதில் களைபடைவதில்லை.
நம்மை படைத்த இறைவன் எல்லா வழிகளிலும் நமக்கு நல்லதையோ நாடிஉள்ளான் மேலும் இன்னும் எத்தனையோ நல்ல விசயங்களை நமக்கு இறைவன் வழங்கி உள்ளான் நாம் நம் அறிவை கொண்டு நல்லது எது கெட்டது எது என்று பிரித்தரிந்து நம் வாழ்கையில் நல்வழியை தேர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும் அதை மற்றவர்களுக்கும் எத்தி வைக்கவேண்டும், குறிப்பாக நமக்கு கிடைத்திருக்கும் இறை மார்க்கத்தை மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும்.
நன்றி; இஸ்லாமிய வலை தளங்கள்
No comments:
Post a Comment