முட்லூரில் சாலை மறியல்!
முட்லூர்: இன்று காலை சுமார் 11.00 மணியளவில் சின்னூர், புதுப்பேட்டை மற்றும் சில கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முட்லூர் ஜவுளி கடை அருகில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காதை கண்டித்து சாலை மறியல் ஈடுப்பட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மறியலினால் ஏராளமான வாகனங்கள் கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுச்சாலையில் அணிவகுத்து நின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குயுள்ளினர்.
செய்தி அறிந்த ASP துரை , RDO இந்துமதி ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் நாங்கள் நிவாரணம் பெற்று தருகின்றோம் கூட்டத்தை கலைத்து வாகனங்களுக்கு வழி விடுங்கள் என்று கூறி சமாதானம் செய்தனர் ஆனால் எளிதில் சமாதானம் செய்ய முடியவில்லை.
பின்பு பேசிய சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்கள் இப்போது நாங்கள் கலைந்து செல்கின்றோம். விரைவில் நிவாரணம் கிடைக்கா விட்டால் சுமார் 5000 பெயரை திரட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றார்.
அதன் பின் அனைவரும் களைந்து சென்றனர். இதில் விஷேம் என்னவென்றால் அ.தி.மு.க கரை வேட்டி கட்டிய மீனவர்களும் இந்த மறியலில் கலந்து கொண்டனர்.
இந்த சாலை மறியலால் ஏராளமான பொதுமக்கள் மிகவும் அவதிக்குயுள்ளயினர். பொதுமக்களுக்காக நாம் செய்யும் போராட்டங்களில் இதுபோன்று மற்ற மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது.
இதனால் தான் இஸ்லாத்தில் சாலை மறியலுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடதக்கது!
No comments:
Post a Comment