ஏகஇறைவனின் திருப்பெயரால்...
இந்திய குடியரசுதினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவில்
மாபெரும் இரத்ததான முகாம்
63 வது இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு சவுதி அரேபியா, ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரியாதிலுள்ள மன்னர் ஃபஹத் மருத்துவ நகர் மருத்துவமனையில் தமிழர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யும் இம்முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் செய்துவரும் நிர்வாகிகள், ‘தியாகங்கள் செய்வதென்பது தமிழர்களுக்கு புதிதானதல்ல. ‘ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலகிலுள்ள எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கு கட்டுப்பட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உலகெங்கிலும் உள்ள கிளைகள் தொடர்ந்து இது போன்ற நற்பணிகளை செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் நாம் 16வது இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். சவுதி அரேபியாவில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 20-01-12 வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் இம்முகாமில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காலை 9 மணி முதல் துவங்கும் இந்த முகாம் மாலை 4.45 மணிவரை வரை நடைபெறுமென்று கூட்டத்தில் தெரிவித்தனர்.
முகாம் நடைபெறும் இடம் :
கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி, ரியாத் King Fahad Medical City (KFMC), Riyadh.
நாள் : 20-01-12 Friday, நேரம் : காலை 9 முதல் மாலை 4.45 மணிவரை,
தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்பவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
0542540860, 0536885911, 0507292857
No comments:
Post a Comment