சிதம்பரம்: சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணை, இன்ஸ்பெக்டர் காப்பாற்றினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் கீழ் நேற்று முன்தினம் இரவு, நகர இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். இரவு 10 மணிக்கு சிதம்பரத்திலிருந்து வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள, பெண் ஒருவர் தண்டவாளத்தில் ஓடினார். இதை பார்த்தவர்கள் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சதீஷ், ஓடிச் சென்று அந்த பெண்ணைக் காப்பாற்றினார். விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி கொளஞ்சி, 45, என்றும், மகன் குடித்து விட்டு தகராறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். அந்த பெண்ணுக்கு இன்ஸ்பெக்டர் சதீஷ் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
post; பத்திரிக்கை செய்தி

No comments:
Post a Comment