கடலூர், ஜன.22-
கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்தார்.
புதிய கலெக்டர்
கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி மாற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக தமிழ்நாடு மீன்வள கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர ரத்னூவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை அடுத்து புதிய கலெக்டர் பதவியேற்கும் விழா நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது புதிய கலெக்டர் ராஜேந்திர ரத்னூ முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் ஏற்கனவே கலெக்டராக இருந்த அமுதவல்லி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின்னர் கலெக்டர் ராஜேந்திரரத்னூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒத்துழைப்பு தர வேண்டும்
நான் ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த பின்னர் முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் தான் உதவி கலெக்டராக பணிபுரிந்தேன். பின்னர் 2007 முதல் 2009 வரை 2 ஆண்டுகள் இங்கேயே கலெக்டராக பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. தானே புயலின் தாக்குதலால் கடலூர் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். என்மேல் நம்பிக்கை வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக முதல்- அமைச்சர் எனக்கு இங்கே பணியை வழங்கி இருக்கிறார். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் ஏற்கனவே இங்கு கலெக்டராக பணிபுரிந்த போது விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் என அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதே போல அரசின் நிவாரண உதவிகள், நல திட்டங்கள் மக்களை சென்றடைய அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
புகார் மையங்கள்
புயலுக்கு முன்பு கடலூர் மாவட்டம் எப்படி இருந்ததோ அதைவிட நல்ல வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன். மக்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே இடைவெளி இல்லாத வகையில் அரசு திட்டங்களை கொண்டு செல்வேன்.
மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக புகார் மையங்களை திறக்க முடிவு செய்துள்ளேன். பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை அல்லது புகார் இருந்தால் அதை புகார் மையத்தில் மனுவாக எழுதி கொடுத்தால், அந்த மனுவில் நியாயம் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை தவிர்க்கலாம்.
புயலில் தப்பிய பயிர்களை காப்பாற்றுவது எப்படி என்பது பற்றி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறேன். அதேபோல எரியாமல் உள்ள தெருவிளக்குகளையும் எரியவைக்கவும், சேதம் அடைந்த தெருவிளக்குகளுக்கு பதிலா புதிய விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய திட்டங்கள்
தானே புயலால் கடலூர் மாவட்டம் முழுவதும் 2 கோடிக்கும் மேலான மரங்கள் சேதம் அடைந்து விட்டன. மாவட்டத்தின் பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழ லையும் மேம்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே இடைக்கால, குறுகியகால மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து அரசு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் புதிய மரங்களை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து, அதை அரசுக்கு தெரிவித்து புதிய திட்டங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன். கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பு 99 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ஒரு சதவீத மின் இணைப்புகளும் விரைவில் வழங்கப்பட்டு விடும். தற்போது விவசாயத்திற்கான மின் இணைப்பு கொடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
துரிதமான சீரமைப்பு பணி
குஜராத் நிலநடுக்கம், ஒடிஷா புயல் ஆகியவற்றின்போது நடைபெற்ற நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளை விட கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம், கடலூர் மாவட்டம் விவசாயத்தை சார்ந்துள்ள மாவட்டம். மின்சார தடையால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டாவது மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ராஜேந்திரரத்னூ இது பற்றி மின்சார வாரிய உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். புதிய கலெக்டர் ராஜேந்திர ரத்னூவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், உதவி கலெக்டர் கிரண்குராலா, செய்தி-மக்கள் தொடர்புத்துறை அதிகாரி தமிழ்செல்வன் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கலால்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment