Thursday, January 24, 2013

விஸ்வரூபம் திரைப்படம்: மனிஷ் திவாரியின் கருத்திற்கு பதிலடி கொடுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்

டேம் 999” படத்தின் தடையை நீக்க முடியாது வழக்கை டிஸ்மிஸ் செய்த சுப்ரிம் கோர்ட்!


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தவுடன் அதை எதிர்த்து கமல் இன்று (24-1-2013) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கு மதியத்திற்கு பிறகு விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாட்சா மற்றும் நீதிபதி சாந்த குமார் நீதிபதி வெங்கட்ராமன் அடங்கிய பென்ச் படத்தை தற்போது அனுமதிக் முடியாது எனக் கூறி வழக்கை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
மேலும் படத்தை பார்த்த பின்னர் தான் முடிவு எடுக்க முடியும்என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற 26 ஆம் தேதி படத்தை பார்க்க நீதிபதிகள் திட்டமிட்டுள்ளனர்.
தனிக்கை துறை அனுமதி அளித்த பின்னர் படத்தை தடை செய்வது சட்டப்படி குற்றம்என்பது கமல் மற்றும் இன்னும் சிலரின் வாதம்.
ஆனால் அதை நிராகரிக்கும் வன்னம் தற்போது நிதிபதிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
தனிக்கை துறை அனுமதி அளித்துள்ளது என்றாலும்படத்தை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தற்போது கூறியுள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளே படத்தை பார்த்த பிறகு தான் முடிவு செய்ய முடியும் எனக் கூறியுள்ள நிலையில்,   நமது நாட்டின் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சாரக உள்ள மனிஸ் திவாரி தனிக்கை துறை அனுமதி அளித்த பிறகு சாதாரணமாக எந்த படத்தையும் தடை செய்து விடக்கூடாதுஎன்ற கருத்தில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

டேம் 999” படத்தின் தடையை நீக்க முடியாது – வழக்கை டிஸ்மிஸ் செய்த சுப்ரிம் கோர்ட்!


999 படத்துக்கான தடையை நீக்க மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தடையை நீக்கக் கோரும் தயாரிப்பாளர் சோகன்ராயின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. படம் தயாரிக்கும் போது மக்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியார் அணை உடைவது போன்ற காட்சி உள்ளதால் தமிழக அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

-தினகரன் 24-1-2013

No comments:

Post a Comment