Wednesday, April 11, 2012

தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு பரங்கிப்பேட்டையிலும் உணரப்பட்டது!



சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இன்று சுமத்ரா தீவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தின் தாக்கமாக சென்னையில் கட்டிடங்கள் குலுங்கின.

 பரங்கிப்பேட்டையிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குளங்களில் தண்ணீர் கலங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை மண்ணடியில் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து நிற்க்கும் மக்கள். 

சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

ஊட்டி: ஊட்டி மெயின்பஜாரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், கடைகள் குலுங்கின. குன்னூரின் மதியம் 2.10 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக ஓட்டல் ஒன்றில் கண்ணாடி நொறுங்கியது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், வீடுகளில் இருந்த சேர்கள், டேபிள்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். சின்ன காஞ்சிபுரம், கலெக்டர் அலுவலக பகுதி, நத்தப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

பிற்பகல் 3.00 pm தகவல்: சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக, இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு; அச்சம் வேண்டாம்.

No comments:

Post a Comment