Saturday, April 21, 2012

109 வயதிலும் உழைக்கும் முஸ்லிம் முதியவர்!




கீழக்கரை, ஏப்ரல் 21: கீழக்கரையைச் சேர்ந்த 109 வயது செய்யது அபுதாகிருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது வழங்க வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர் (109). கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து வருகிறார். வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார். மீன்களை சுத்தப்படுத்தும் தொழிலில் வாடிக்கையாளர்கள் கொடுக்கின்ற கூலியைப் பெற்றுக்கொள்ளு்ம் இவர் பேரம் பேசுவதில்லை.



இது போன்ற கடினமான வேலையில் ஈடுபடும்போது சிறிது கவனம் சிதறினாலும் கைகளில் ரத்தகாயம் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்த முதிய வயதிலு்ம் இவர் இவ்வளவு துல்லியமாக வெட்டுவதற்கு காரணம் செய்யும் தொழிலி்ல் இருக்கும் ஈடுபாடுதான்.


இது குறித்து சிறு தொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் செயலாள‌ர் நல்ல இப்ராகிம் ஆகியோர் கூறுகையில்:


ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பான செயல்களுக்காக‌ பல்வேறு விருதுகளை அறிவித்து பலரையும் கெளரவப்படுத்துகிறது. அந்த வகையில் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் 100 ஆண்டுகளைக் கடந்த மூத்த குடிமகனான அபுதாகிர் அவர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்றனர்.

ஏற்கனவே இவருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய இளைஞர்களே உழைக்க சோம்பேறிப்படும் இந்த காலத்தில், இந்த வயத்தில் உழைத்து சாப்பிடும் ”செய்யது அபுதாஹிர் அப்பா” ( அப்பா என்பது பரங்கிப்பேட்டை பாஷை - தாத்தா என்று அர்த்தம்) பாரட்டுகுரியவரே!


அல்லாஹ் அவர்களுக்கு இன்னும் உடல் தாக்கதை அதிகரிக்க செய்வனாக... 


இஸ்லாமும் உழைத்து உண்பதை எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதை கீழ்கானும் ஹதீஸ் நமக்கு தெரிவிக்கின்றது...2072.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்."  - என மிக்தாம்(ரலி) அறிவித்தார். 
Bukari Volume :2 Book : 34

No comments:

Post a Comment