Thursday, April 19, 2012
சிதம்பரம் பள்ளிப்படையில் பெண்கள் பயான்;
சிதம்பரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதிகமான இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக,
சிதம்பரம்; 17.04.12 மதியம் 03.00 மணியளவில் அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பள்ளிப்படையில், பெண்கள் பயான் நடைபெற்றது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்'இஸ்லாம் என்றால் என்ன?'என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்.
Tuesday, April 17, 2012
சிதம்பரம் ராகேவேந்திர கல்லூரி அருகே விபத்து 2 பேர் பலி!
கீழமுங்கிலடி, ஏப்ரல் 17: சென்னை விமானம் நிலையத்தில் உறவினரை வெளிநாட்டு செல்ல வழியனுப்பிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த நாகை மாவட்டம் பூங்கானுரை சேர்ந்த சர்புன்னிசா (60), ஜபரூத்தின் (40) மற்றும் டிரைவர் கார்த்தி ஆகியோர் காரில் பூங்கானுர் நோக்கி சென்று கொண்டிருந்த போது காலை 7.30 மணியளவில் சிதம்பரம் கீழமுங்கிலடி ராகேவேந்திர கல்லூரி அருகே எதிர வந்த டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியத்தில் காரில் இருந்த சார்புன்னிசா (60) மற்றும் ஜபரூத்தின் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் டிரைவர் கார்த்தி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தில் பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரின் உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் திரண்டுயுள்ளனர். மேலும் செய்தியரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை நேரில் சென்று அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி மற்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இன்னா இலைஹி வயின்னா இலைஹி ராஜிஊன்...
சிதம்பரம் வாராந்திர பயான்
சிதம்பரம்;15.04.12 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'நபிகளாரின் மனைவிகள் ஓர் பார்வை ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
நகர தலைவர் ஷேக் முஹம்மதுஅவர்களும்உரைநிகழ்த்தினார்கள்.100அதிகமானபெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)