சிதம்பரம;31.01.13 தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக நேற்று (30.01.2013) மாவட்ட தலைவர் முத்துராஜா தலைமையில் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் விஸ்வரூபத்தை நிரந்தர தடை செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவின் விபரம்:-
அணைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் என்ற திரைபடத்தை எடுத்து அதில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், இஸ்லாம் மார்க்கம் தீவிரவாதத்தை தூண்டுகின்றது என்பதை போன்று படமெடுத்து மற்ற சமூக மக்கள் மத்தியில் இஸ்லாம், முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதம் தான் என்ற பொய் கருத்தை மக்கள் மத்தியில் விதைத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரை படத்தை கடலூர் மாவட்டத்தில் எங்குமே திரையிடவிடாமல் தடை செய்யுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக அன்புடன் கேட்டுகொள்கிறோம் .
என மாவட்ட தலைவர் கையெழுத்திட்டு மனு வழங்கப்பட்டது .
கலெக்டர் பங்களாவிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை TNTJ-வை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கள் குழந்தைகளோடு பேரணியாக சென்று மனு கொடுத்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் சென்று மனு கொடுத்து விஸ்வரூபம் திரைப்படத்தால் ஏற்படும் சட்ட ஒழுங்கை விளக்கி கூறினர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள் TNTJ வின் நியாயமான கோரிக்கையை அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த ஏராளமான TNTJ சகோதர, சகோதரிகளை நோக்கி சமூக விரோதிகள் கல் எறிந்தனர். இந்த கல்வீச்சில் முஹம்மத் அலி என்கிற சகோதரர் லேசான காயம் அடைதார்.
ஆவேசம் அடைந்த TNTJ வினரும் போலீசாரும் கல் எறிந்த சமூக விரோதிகளை தேடினர். கரெண்ட் கட்டாகி இருந்த காரணத்தால் சமூக விரோதிகள் தப்பினர்.
அமைதியாக கலெக்டரிடம் மனு கொடுத்துகொண்டிருந்தவர்கள் மீது அநியாயமாக கல்வீச்சு நடத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த TNTJ சகோதர சகோதரிகள் விஸ்வரூபத்தை தடை செய்ய கோரியும், கல் எறிந்த சமூக விரோதிகளை கைது செய்ய கோரியும் கடும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த DSP உள்ளிட்ட உயர் அதிகாரிகள் TNTJ வினரை சமாதான படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதன் பிறகு தொலைகாட்சி மற்றும் பத்திரிகை நிருபர்கள் TNTJ நிர்வாகியிடம் பேட்டி கண்டனர்.
அல்லாஹு அக்பர்!
No comments:
Post a Comment