Monday, July 8, 2013

ரமலான் சஹர் உணவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை 

சார்பாக ரமலான் முழுவதும் சஹர் உணவு

                        
                                2013
                             

 சிதம்பரத்தில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவர்கள் 

வியாபார ரீதியாக தங்கும் வியாபாரிகள் 

அவசர தேவைக்காக மருத்துவத்திற்கு தங்கும் நபர்கள் 






                   (படங்கள் பையில்) 
ஆகியோருக்குகாக  சஹர் உணவு .சென்ற வருடங்களாக அல்லாஹ்வின் பேரருளால் செயல்பட்டு வருகின்றது... அதை தொடர்ந்து இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெற்றியடைய துவா செய்யுங்கள் 

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.07.07.13அன்று மகரிப்பிற்கு பிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ,பத்ருஜமான் அவர்கள் ;ரமலானை வரவேற்போம்' என்ற தலைப்பில உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

கேபிள் டிவியில் இதுதான் இஸ்லாம் -சிதம்பரம்

மன குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு  



07.07.13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.மணி முதல் 11 மணி வரை உள்ளூர் கேபிள் டிவியில் (ATN) இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செயபடுகிறது.அதில்மன குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு  
ஒளிபரப்பட்டது தொடர்ந்து ஒலிபரப்பாக துவா செய்யுங்கள் -அல்ஹம்துலில்லாஹ்

மார்க்ஸ்க்கு உதவி--சிதம்பரம் கிளை



சிதம்பரம்; 07.6.2013 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிளை மர்கஸ் காட்டுவதற்குக்காக சிதம்பரம் கிளையின் சார்பாக RS;15000 அந்த கிளையின் நிர்வாகிகள் வசம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் 2013 -க்கான நோன்பு கஞ்சி...


                                                
சிதம்பரம்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக கடந்த சில வருடங்களாக   அல்லாஹ்வின் பேரருளால் நோன்பு கஞ்சி காய்ச்சாப்பட்டு வருகின்றது... அதை தொடர்ந்து இந்த வருடமும்(2013) நோன்பு கஞ்சி காய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது...

இந்த வருட நோன்பு கஞ்சிக்கு  ரூபாய் 3000/- வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். ஒரு நாள் கஞ்சிக்காக பெறப்படும் தொகையிலிருந்தே அந்த நாளின் இஃப்த்தார் செலவு எடுக்கப்படும்.. எனவே நீங்கள் கொடுக்கும் அந்த தொகையானது(3000/-) நோன்புக் கஞ்சி மற்றும் அன்றைய தின இஃப்த்தார் ஆகியவற்றிற்க்கு செலவலிக்கப்படும் ...

உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்...

                                                                        தொடர்புக்கு...
                                                 
                                    மாவட்ட பொருளாளர்  :A.K தாஜ்      9940862125                                  
                                                       செயளாலர் : இப்ராஹிம்: 9751412122

Friday, July 5, 2013

இந்த வார ஜும்மா-சிதம்பரம்




அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளையின் சார்பாக 05.07.13 அன்று ஜும்மா உரை நடைப்பெற்றது அதில் ரமலானின் சிறப்புகள்  என்ற தலைப்பில் சகோ;ரஜாக்  அவர்கள் உரையாற்றினார்கள்......................அல்ஹம்துலில்லாஹ் 

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி -சிதம்பரம் கிளை







பின்னதூர்; 04.07.13,பின்னதூர் மேற்கு,கலிபுல்லா நகரில் 03.07.13 அன்று இரவு 11.00 மணியளவில் ஒரு குடிசை வீட்டில் தீ பிடித்து எறிய துவங்கியது. இதனால் அருகில் இருந்த ஆறு குடிசைகளிலும் தீ பரவியது இதனால் வீட்டில் இருந்த பீரோ ,டிவி ,பணம்,சைக்கிள், உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின 

இதனை பார்த்த அப் பகுதிவாசிகளும் ஊர் இளைனர்களும் தீயைணைக்க முடிந்த அளவு பாடுபட்டனர்.

அதன்பின் வந்த தீ அணைப்பு வீரர்கள் மீதம் உள்ள எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தார்கள்.

காலை சுப்ஹூ தொழுகையில் இந்த செய்தியை அறிந்த TNTJ சிதம்பரம் கிளை நிர்வாகிகள்,உடனே அங்கு சென்று பாதிக்கபட்டோருக்கு ஆறுதல் கூறி,அங்கு எல்லவற்றையும் இழந்து என்ன செய்வது புரியாமல் இருந்த அந்த குடும்பத்துக்கு முதல் உதவியாக ஒரு குடும்பத்துக்கு RS;2000/வீதம் ஆறு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இதற்க்காக பாடுப்பட்ட அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்செய்யட்டும்! பெரும் விபத்திலிருந்து காத்த அல்லாஹ்விற்கு நன்றி சொல்வோம் இணை வைக்காமல்!