Saturday, September 15, 2012

அமெரிக்க தூதரக முற்றுகை புதிய தலைமுறை TV செய்தி


சென்னையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : அண்ணாசாலையில் போக்குவரத்து முடங்கியது



சென்னையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : அண்ணாசாலையில் போக்குவரத்து முடங்கியது



முகமது நபிகளை விமர்சித்து அமெரிக்கர் இயக்கிய திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க தூதரகம் முன்பு தொடங்கிய போராட்டம் மேலும் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணாசாலை மசூதி முன்னர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.முகமது நபிகளை விமர்சித்து திரைப்படம் எடுத்த அமெரிக்க இயக்குனரின் படத்தை எரித்தும், அமெரிக்க தேசியக் கொடியை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து அமெரிக்க துணை தூரகத்திற்கு முன்னர் குவிந்த போராட்டக்காரர்கள் அமெரிக்காவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அங்கேயும் தொடர்ந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர்.
ஸ்தம்பித்தது அண்ணாசலை : இந்நிலையில் சாதாரணமாகவே பரபரப்பாக இருக்கும் அண்ணாசாலையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்தை முடக்க வேண்டாம் என போராட்டக்காரர்களை கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அங்கே கூட்டம் கலைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயார் நிலையில் வஜ்ரா : போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றால், போராட்டுக் குழுவை கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்துடன் தயாராக இருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றதால் அமைதி ஏற்பட்டது.
தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரம்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

http://puthiyathalaimurai.tv/new/?p=31957

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட தவ்ஹீத் ஜமாஅத்! ஸ்தம்பித்துப்போன சென்னை அண்ணா சாலை (வீடியோ)

Friday, September 14, 2012

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்  - சிதம்பரத்தில் 

நபிகள் நாயகத்தைக் காமுகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து முற்றுகை!


குர்ஆன் மீது சிறுநீர் கழித்தும், குர்ஆனை கழிவறையில் வீசியும், குர்ஆனை எரித்தும் இஸ்லாத்திற்கு எதிராக போர் தொடுத்து வரும் அமெரிக்க நாய்களுக்கு தக்கபாடம் கற்பிக்க குடும்பத்துடன் அணிதிரண்டு வாரீர்.

நாள்:இன்ஷாஅல்லாஹ்15.09.2012 சனிக்கிழமை               மதியம் 4.30 மணிக்கு

இடம் ; தலைமை தபால் நிலையம் –வடக்கு வீதி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்பிள்ளை, தந்தை, உலகமக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காதவரை உங்களில் யாரும் முஃமினாக (இறைநம்பிக்கையாளராக) முடியாது.

அமெரிக்க நாய்களுக்கு தக்க பாடம் புகட்ட அணிதிரண்டு வாரீர் !!

அழைப்பது......
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சிதம்பரம் கிளை 

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை! TNTJ அறிவிப்பு!



நபிகள் நாயகத்தைக் காமுகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! என்றும் தமிழகம் எங்கும் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டம நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் அறிவிக்கின்றது.

பொது செயலார் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது சென்னையில் 15-9-2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்க தூரகம் முற்றுகையாகவும் சென்னை அல்லாத மற்ற பகுதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் விபரம் அறிய

சிதம்பரம் வாராந்திர பயான்

சிதம்பரம்;.09.09.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'அழைப்பு பணியின் அவசியம்'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, September 8, 2012

புதிய நிர்வாகிகள் தேர்வு--பின்னத்தூர்

சிதம்பரம்; 05.09.12 அன்று பின்னத்தூரில் நிர்வாக,தேர்ந்தெடுப்பும், நிர்வாக சீரைமைப்பும் நடைபெற்றது.

                                                மாவட்ட தலைவர் முத்து ராஜா, .மாவட்ட பொருளாளர் AK.தாஜ்தீன் மாநில மாணவரணி கலீல் அவர்கள் முன்னிலையில் சிதம்பரம் இமாம் ஹனீப் அவர்கள் தவ்ஹீத் ஜமாத் என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன நிர்வாகிகளின் பண்புகள் போன்றவற்றை விளக்கி உரை நிகழ்த்தினார்கள்

பின்னர் நிர்வாகத் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது 
தலைவர் ; வஜ்ஹில்லாஹ்              துணை தலைவர் ;கமருதீன்
செயலாளர் ;சேக் பரீத்                        துணை செயலாளர் ;அப்துல் ஜமீல்
பொருளாளர் ;அப்துல்லாஹ்             தொண்டரணி ;பைசல்
மாணவரணி ;ரிஸ் பானுல்லாஹ்-- PRO;முஹமது நிவாஸ்

                                             அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் கட்டுவதற்காக வசூலித்த வாளியில்-தங்க வளையல்


கையில் அணிந்திருந்த தங்கவளையல் வழங்கிய பெண்மணி


சிதம்பரம்;31.08.2012 அன்றுகாட்டுமன்னார்குடிமர்கஸ்கட்டுவதற்காக                  வசூலித்தவாளியில்,பணமாக- ருபாய்- 4445.00  (தங்க வளையல் 1-கால் பவுன்)- ருபாய்-28000.00   மற்றும்ரசீதுமூலமாக -ரூபாய்- 25100.00   மொத்தம்-RS;57545.00 காட்டுமன்னார்குடிநிர்வாகிவசம் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!           அல்லாஹ்அவர்களுக்குநற்கூலிவழங்குவானாக